மேலும் அறிய

MGR Film Institute: எம்ஜிஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை: மே 2 முதல் விண்ணப்பிக்கலாம்: எப்படி?

MGR Film Institute Admission 2024: எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க மே 2ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க மே 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனம்‌ கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ ஒரே கல்வி நிறுவனம்‌ ஆகும்‌. இந்நிறுவனம்‌ திரைப்படத் துறை மற்றும்‌ தொலைக்காட்சி துறையில்‌ மிகச்‌ சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும்‌, இயக்குநர்களையும்‌ உருவாக்கி வரும்‌ தனித்துவம்‌மிக்க நிறுவனமாகும்‌.

இந்தியாவிலேயே முதன்‌ முறையாக திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கு என 2016- 2017ஆம்‌ கல்வி ஆண்டு முதல்‌ தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்‌ கலை பல்கலைக்கழகத்துடன்‌ இணைக்கப்‌ பெற்றது.

இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும்‌ நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வரும்‌ தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌ திரைப்படம்‌ மற்றும்‌  தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனத்தில்‌, 2024-2025ஆம்‌ கல்வி ஆண்டில்‌ கீழ்க்கண்ட பிரிவுகளில்‌ பட்டப் படிப்பிற்கான மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(ஒளிப்பதிவு) (Cinematography)

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(எண்மிய இடைநிலை) (Digital Intermediate)

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(ஒலிப்பதிவு) (Audiography)

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(இயக்குதல்‌ மற்றும்‌ திரைக்கதை எழுதுதல்) (Direction and Screenplay writing)

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(படத்தொகுப்பு) (Film Editing)

இளங்கலை காட்சிக்கலை — Bachelor of Visual Arts

(உயிர்ப்பூட்டல்‌ மற்றும்‌ காட்சிப்பயன்‌) (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம்‌ உள்ள அனைத்து மாணவ/ மாணவியரும்‌ மேற்குறிப்பிடப்பட்ட பாடப் பிரிவுகளில்‌ சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்பங்களை 02.05.2024 முதல்‌ 20.05.2024 வரை www.tn.gov.in எனும்‌ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்.‌

உரிய தகவல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன்‌ முதல்வர்‌ (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்‌.ஜி.ஆர்‌. திரைப்படம்‌ மற்றும்‌ தொலைக்காட்சிப்‌ பயிற்சி நிறுவனம்‌, சி.ஐ.டி. வளாகம்‌, தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு அஞ்சல்‌ மூலம்‌ மட்டுமே அனுப்ப வேண்டும்.

குறிப்பாக 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ வந்து சேரும்‌ வகையில்‌ அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌, 27.05.2024 அன்று மாலை 05.00 மணிக்கு மேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌கொள்ளப்பட மாட்டாது என்றும்‌, மாணவர்கள்‌ விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வர வேண்டாம்‌ என்றும்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

படிப்புகள் குறித்து அறிய: https://cms.tn.gov.in/sites/default/files/whatsnew/prospectus_filminst.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
Embed widget