மேலும் அறிய

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை; மனித உரிமை, சமூக நீதி பயிற்சிகள் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும்.

மாணவர் நலனுக்கென பள்ளிக் கல்வித்துறை வரும் கல்வியாண்டில் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்துப்  பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு:

கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்- மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை கவனித்து, அரவணைத்து சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கி வருகின்றனர். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியுடன், மாணவர்களின் மனநலம் மேம்படத் தொடர்ந்து உரையாடுவதில் உள்ள சிரமங்களை உணர்ந்திருக்கிறது. இந்தச் சிக்கல்களைக் போக்கவும், மாணவர்களின் நலனை காக்கவும் அரசு பின்வரும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு:

மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்து கொள்ள ஏதுவாக, மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர்- மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடைவெளியால் செயல்படாமல் இருக்கும் இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.

மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், கூத்து, புகைப்படக் கலை, நடனம் போன்ற பல திறன்களை வெளிப்படுத்தும் வண்ணம் கலைத் திருவிழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். 

கலை - விளையாட்டுத் திறன்களிலும் மன்றச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். பள்ளிப் பாடங்கள் தவிர, சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் போன்ற பொருண்மைகளில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மாணவர்களுக்கு தொழில்நுட்பத்திலும் கணினியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கணினி நிரல் மன்றங்களும் எந்திரனியல் மன்றங்களும் ஏற்படுத்தப்படும். மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking-ல் பயிற்சி அளிக்கப்பட்டு மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாணவர்கள் நல்ல உடல் நலத்தோடு இருந்தால் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்த முடியும் என்பதால் உடலியக்க நிபுணர்கள் (Physio theraphists) வாயிலாக சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிதோறும் காய்கறித் தோட்டங்கள் மாணவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் பள்ளியின் சத்துணவில் பயன்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை; மனித உரிமை, சமூக நீதி பயிற்சிகள் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அன்பில் மகேஷ்

மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாணவர்களிடம் தலைமைப்பண்பு, நல்லொழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளை வளர்க்க மண்டல மாநில அளவில் சாரண, சாரணியர் முகாம்கள் நடத்தப்படும்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென பல்வேறு இதழ்கள் வெளிவரவிருக்கின்றன. 3- 5 வகுப்பு மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ’தேன் சிட்டு’ என்கிற இதழும் வெளிவரவிருக்கின்றன. மேலும், ஆசிரியர்களுக்கென நாட்டிலேயே முதல்முறையாக ‘கனவு ஆசிரியர்’ என்கிற இதழும் வெளிவரவிருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இவ்விதழ்களுக்குத் தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம்.

அன்றாட நிகழ்வுகளிலும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலும் உள்ள அறிவியலை அறிந்துகொள்ள வழிசெய்யும் வகையில் ’எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்கிற புரிதலோடு அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கென STEM எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன் மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும்.

மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும்.

மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும் பெற்றோரும் பள்ளிக்கூடமும் அரசும் இணைந்து செயல்படவேண்டிய தேவை இருக்கிறது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
SRH vs RR: எப்படி போட்டாலும் அடிச்ச ஹைதரபாத்! ஒரே சிக்ஸர் மழை! 287 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
Embed widget