மேலும் அறிய

Medical Rank List: மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நாமக்கல் மாணவர் முதலிடம்- காண்பது எப்படி?

Medical Rank List 2024: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியலை வெளியிட்டார்.இதில் நாமக்கல் மாணவர் ரஜனிஷ் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டியலை வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் நாமக்கல் மாணவர் ரஜனிஷ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை, அயனப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் சையது ஆரிஃபின், சேத்துப்பட்டைச் சேர்ந்த மாணவி ஷைலஜா ஆகியோர் அடுத்தடுத்து 2, 3ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை இடங்கள்?

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 2,721 விண்ணப்பங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கு 495 மருத்துவ இடங்களும் 125 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார்.

சைதாப்பேட்டை நீட் கோச்சிங் மையம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே அதில் படித்த 4 மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் முதல் 10 இடங்களில் வந்துள்ளனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொது கலந்தாய்வு தொடங்க உள்ளது. 22ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும்  அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் - 6630,

அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பி டி எஸ் இடங்கள்  - 1683, மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் -   29429, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் - 28819,

 மாணவர்கள் -10704

 மாணவிகள்  18114

2024  -2025 ஆம் ஆண்டுக்கான 7.5% அரசுப் பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கிட்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், சுய நிதி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் - 496, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் - 126, மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்  - 3733, ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் -3683

 மாணவர்கள் -1041

மாணவிகள் - 2642

2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சுயநிதி மருத்துவம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ( மேனேஜ்மென்ட் கோட்டா ), நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் - 1719, நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் - 430, மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் - 13618

ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் தகுதி உடையவர்கள் -13417

 மாணவர்கள் - 6462 

 மாணவிகள்  - 8755

கடந்த ஆண்டை விட 150 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி ரிசர்ச் சென்டரில் 100 மாணவர்கள் அதிகம் சேர்க்கப்பட உள்ளனர்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget