மேலும் அறிய

அரசுப் பள்ளிகளில் வரும் அதிரடி மாற்றங்கள்! 25 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில்!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

  1. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 13 இலட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  2. பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல். அதாவது வாசிப்பு இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் விதத்தில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.
  3. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி. அதாவது பள்ளி மாணவர்களின் வாழ்வியல் திறன்கள், விழுமியங்கள், பாலினச் சமத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூக ஊடகத்தின் பயன்பாடு, சுகாதாரமான மழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வுக் கட்டகம் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதுக்கு என்று ஒரு பாடவேளையும் ஒதுக்கப்படும்.
  4. கலைத் திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குக் கலைச்சிற்பி என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.
  5. அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த விளையாட்டு சாதனங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் சுமார் 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறுவர்.
  6. தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
  7. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சிபெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
  8. சர்வதேச தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  9. குழந்தைநேய திறன்மிகு வகுப்பறைக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும்.
  10. புதிதாக 13 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 14 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
  11. அரசுப் பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவர்.
  12. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ். குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாக சேர்க்க வேண்டும்.
  13. ஆசிரியர்களின் வகுப்பறை பயன்பாட்டிற்கு கைப்பிரதி பாடநூல் வழங்கப்படும்.
  14. மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும்.
  15. மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1,25,000 ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
  16. தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.
  17. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  18. பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மொழிபெயர்க்கப்படும்.
  19. மூத்த வரலாற்று அறிஞர்களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
  20. அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.
  21. தந்தை பெரியார் குறித்த இலக்கிய பதிவுகள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பாக வெளியிடப்படும்.
  22. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.
  23. நூலகக் கட்டடங்கள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும்.
  24. உள்ளூர்த் தேவைகளின் அடிப்படையில் செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு, தையற்கலை, மெழுகு மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற கற்போருக்கு உகந்த தொழிற்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
  25. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget