மேலும் அறிய

மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !

கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தேர்வர்களின் நலன்கருதி தேர்வு மையங்களின் முன்பு நிழற்பந்தல்கள் அமைப்பு.

தேர்வு மையத்தின் வெளியில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனைகளுக்கு பின்பு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது

தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, MBBS, BDS., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புக்கான 2026ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை. மதுரை மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களில் 8,578 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். நீட் தேர்வு மையங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தேசிய தேர்வுகள் முகமை தேர்வு அறையில் மாணவ - மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
 பல்வேறு கட்டுப்பாடுகள்

அதன்படி, தேர்வர்கள் அனைவரும், தெளிவான தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் அரை கை கொண்ட, வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தைக் கொண்டும் ஷூக்கள் அணியக் கூடாது. தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ ஆபரணங்களையோ அணிந்து வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் மத அல்லது கலாச்சார ரீதியான குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
உச்சகட்ட செக்கிங்

மொபைல் போன்கள், ப்ளூடூத் கருவிகள், இயர்போன்கள், மைக்ரோஃபோன்கள், பேஜர்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ் மற்றும் எரேசர் உள்ளிட்ட எந்த ஸ்டேஷனரி பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது. பர்சுகள், கூலிங் கிளாஸ்கள், ஹேண்ட் பேக்குகள், பெல்ட்கள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்படாது. தேர்வர்கள் தங்களது அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
 
14 தேர்வு மையங்கள்

இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என  தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 14 தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் உள்ள நீட்தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் தேர்வர்களின் நலன் கருதி கடும் வெயிலின் தாக்கம் காரணமாக தேர்வு மையத்தின் வெளியில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனைகளுக்கு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget