மேலும் அறிய

Kalaignar Karunanidhi Lesson: பள்ளி புத்தகங்களில் கலைஞர் பாடங்கள்: 8ஆம் வகுப்பிலும் கருணாநிதி பற்றிய பாடம்!

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.

8ஆம் வகுப்பு பள்ளி பாடப் புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2021-ல் தமிழக சட்டப்பேரவையில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். அதையடுத்து 9ஆம் வகுப்பு புத்தகத்தில், செம்மொழி நிலை, தமிழ்மொழிக்குக் கிடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பாடம் சேர்க்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இந்த பாடம் சேர்க்கப்பட்டு, வழங்கப்பட்டது.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியே பாடல் மட்டும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், 9ஆம் வகுப்புப் பாடப்புத்தக்கத்தில் முதல்முறையாக அவர் குறித்த பாடம் இடம் பெற்றது.

 பன்முகக் கலைஞர்

தொடர்ந்து தற்போது 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது. வரும் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞர் குறித்த பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில், குடிமையியல் பாடத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வருவதற்கு, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டத்தில், பெண் உரிமை சட்டங்கள்: "இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்த இயக்கங்களின் பயனாக ஆண்களுக்கு இணையாக பெண்களையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு சட்டரீதியான ஓர் உரிமை மறுக்கப்படும்போது, அதற்குத் தீர்வு வேண்டி அவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலும். எனவே, பெண்ணுரிமையில் சட்டமியற்றலின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்திய அளவில் இயற்றப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்கி வருகின்றன. சதி ஒழிப்புச்சட்டம் 1829-இன் படி, கணவன் இறந்த பிறகு மனைவியை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் (சாரதா சட்டம்) 1929-இன் படி, பெண் பிள்ளைகளை இளம் வயதில் திருமணம் செய்துவைக்கும் வழக்கமும் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டன. விதவை மறுமணச் சட்டம் 1856-இன் படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டனர். 1958இல் இயற்றப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டமானது, பெற்றோர்களின் சொத்தில் மகளுக்குச் சொத்துரிமையை உறுதி செய்தது.

எனினும், இச்சட்டம் இயற்றப்பட்டபோது கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண் வாரிசுகளுக்கான உரிமை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையானது வரதட்சணை என்னும் கொடிய வழக்கம் நீடிப்பதற்கும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கூட்டுக் குடும்ப சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காக, 1956-இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்திருத்தமானது இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டம் 1989 என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தமிழ்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கு 1989இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget