மேலும் அறிய

அக்டோபர் 3-ஆம் தேதி JEE அட்வான்ஸ்ட் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கோரமாகத் தாக்கியதால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஜூ ந் 25 ஆம் தேதி, ஜூலை 5 ஆம் தேதி என்று இரண்டு முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை ஐஐடி காரக்பூர் முன்னெடுத்து நடத்தவிருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐஐடி காரக்பூர் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. கூட்டு தேர்வுகள் துறை (Joint Examination Board, JAB 2021) இந்தத் தேர்வை மேற்பார்வை செய்கிறது.

இது தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், "ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இதுதவிர, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வின் மதிப்பெண் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது (ஐஐஎஸ்இஆர்), இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஎஸ்டி), திருவனந்தபுரம், ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி (ஆர்ஜிஐபிடி), ரே பரேலி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் மற்றும் எனர்ஜி, விசாகப்பட்டினம் போன்றவற்றில் சேர்வதற்கும் பயன்படுகிறது. ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. இரண்டு தாள்களுக்கும் மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு வருபவர்கள் இரு தேர்வுகளையும் எதிர்கொள்வது கட்டாயமாகும்.  ஆண்டுக்கு இரண்டு முறைக்கு மேல் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு, jeeadv.nic.in. என்ற இணையதளத்தை அணுகி தகவல்களைப் பெறலாம்.

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
புதுச்சேரி பள்ளி மாணவர்களே ரெடியா... ! அடுத்து 5 நாள் தொடர் விடுமுறை !
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
ASIAN GAMES : ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி... மற்றுமொரு தங்கத்தை எதிர்நோக்கி ரசிகர்கள்...
TASMAC shops Holiday : நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களே அலர்ட்- வெளியான அறிவிப்பு
MG Hector Tomahawk EV: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் EV; தொடங்கிய டெலிவரி; விலை, ரேஞ்ச், அம்சங்கள் என்ன.?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Honda Elevate Facelift Preview: ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
ஹிட்டடித்த ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்படி இருக்கும்.? இதோ ஒரு முன்னோட்டம்
Embed widget