Menstrual Leave: கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை; சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகம்
கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மாணவிகளின் நீண்ட கால கோரிக்கையை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாலின சமத்துவம், சீருடையில் பேதம் தவிர்ப்பது, சமூக நீதி என பல்வேறு முன்னெடுப்புகளுக்கு கேரளா முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக கல்லூரி மாணவிகள் தங்களின் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை கேரளாவில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் (CUSAT) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையின்படி, பிஎச்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைய உள்ளனர்.
வருகைப் பதிவேட்டில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், மாதவிடாய் விடுப்புக்கு பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டர் வகுப்புக்கும் 2 சதவீத கூடுதல் விடுப்பு, மாதவிடாய் நாட்களுக்காக ஒதுக்கப்படும்.
தற்போது 75 சதவீத வருகைப் பதிவேட்டைக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அதைவிடக் குறைவான வருகைப் பதிவேடு கொண்டிருப்பவர்கள் துணை வேந்தருக்குக் கடிதம் எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். அதேபோல அந்த மாணவர்கள், மருத்துவச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். எனினும் மாதவிடாய் விடுப்புக்கு, மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை. மாணவிகள் ஒரு கடிதத்தை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.
கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை!https://t.co/wupaoCzH82 | #menstruation #Leave #Collegegirls #Kerala pic.twitter.com/F3Ki474rfn
— ABP Nadu (@abpnadu) January 17, 2023
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) தொடர் கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில், அதற்கு பல்கலைக்கழகம் செவி சாய்த்துள்ளது.
கேரளாவில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு 60 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டது நினைவுகூரத் தக்கது.
இதையும் வாசிக்கலாம்: CM Stalin: அரசுப்பள்ளி மாணவர்களின் மதிய உணவில் சிக்கன்..? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை