மேலும் அறிய

ஐஐடி சென்னையில் எம்பிஏ: விண்ணப்பத் தேதி நீட்டிப்பு! 35 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு உறுதி!

சென்னை ஐஐடியின் மேலாண்மைப் படிப்புகள் துறை (DoMS), எம்பிஏ படிப்பிற்கான விண்ணப்பத் தேதியை நீட்டித்துள்ளது.

எம்பிஏ எனப்படும் நிர்வாக மேலாண்மை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 

இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமான ஐஐடி சென்னையின் மேலாண்மைப் படிப்புகள் துறை (DoMS), தனது இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்பிற்கான விண்ணப்பத் தேதியை நீட்டித்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்வித் தகுதி மற்றும் சேர்க்கை முறை

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதுவே SC/ ST/ PwD பிரிவினருக்கு 55% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். எனினும் இவர்கள் செப்டம்பர் 30, 2026-க்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்திய மாணவர்கள் CAT 2025 மதிப்பெண் அடிப்படையிலும், வெளிநாட்டு மாணவர்கள் GMAT மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

பாடத்திட்டம் என்ன?

நிதி, சந்தைப்படுத்தல், மனித வளம் மற்றும் தகவல் அமைப்புகள் போன்ற முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் 7 காலாண்டுகளாகப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய துறைத் தலைவர் சாஜி மேத்யூ, இந்தத் திட்டம் கல்வி, பிராந்தியம் மற்றும் பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வு

இந்தப் படிப்புக்கான மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 2026 மார்ச் மாதம் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். குறிப்பாகச் சென்னையில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://doms.iitm.ac.in/domsmba/ என்ற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

100% வேலைவாய்ப்பு

ஐஐடி சென்னை எம்பிஏ திட்டமானது 100% வேலைவாய்ப்பை வழங்கி சாதனை படைத்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.35.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய பட்டதாரிகள் மற்றும் பணி அனுபவம் வாய்ந்தவர்கள் என இரு தரப்பினரும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK ELECTION PLAN: ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK ELECTION PLAN: ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
UPSC Notification: 933 பணியிடங்கள்.. IAS, IPS, IFS பதவிகள் - எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதிகள், தேதி, தேர்வு விவரங்கள்
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
TN Cabinet: எடப்பாடிக்கு சவாலா..! கல்விக் கடன் ரத்து - இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் முடிவு?
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
WPL 2026 Final RCB vs DC: புதிய சாம்பியன் ஆர்சிபியா? டெல்லியா? இன்று நடக்கிறது இறுதிப்போட்டி!
WPL 2026 Final RCB vs DC: புதிய சாம்பியன் ஆர்சிபியா? டெல்லியா? இன்று நடக்கிறது இறுதிப்போட்டி!
WPL 2026 Final: ஸ்மிரிதியா? ஜெமிமாவா? மகுடத்திற்காக மல்லுகட்டும் உயிர்த் தோழிகள்!
WPL 2026 Final: ஸ்மிரிதியா? ஜெமிமாவா? மகுடத்திற்காக மல்லுகட்டும் உயிர்த் தோழிகள்!
Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?
Volkswagen Tayron: 7 சீட்டருக்கான முன்பதிவை தொடங்கிய ஃபோக்ஸ்வாகன் - விலை என்ன? யாருடன் போட்டி? கார் எப்படி?
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Embed widget