மேலும் அறிய

ICAI Result 2023: வெளியான சிஏ தேர்வு முடிவுகள்.. தேசிய அளவில் சென்னை மாணவர் 2-ஆம் இடம்.. இதோ முழு விவரம்..

மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் தேசிய அளவில் இறுதித் தேர்வில் சென்னை மாணவர் 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் தேசிய அளவில் இறுதித் தேர்வில் சென்னை மாணவர் 2ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்புவோர் ஐசிஏஐ நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.

இந்தத் தகுதித் தேர்வு முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination),  இறுதித் தேர்வு (Final Examination) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. பட்டப் படிப்பை முடித்தவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 

ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு மே மாத அமர்வுக்கான இடைநிலைத் தேர்வு மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

யார் யார் முதலிடம்?

இடைநிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோகுல் சார் ஸ்ரீகர் என்னும் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். இவர் 800 மதிப்பெண்களுக்கு 688 மதிப்பெண்கள் எடுத்து, 86 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.  அதேபோல பாட்டியாலாவைச் சேர்ந்த நூர் சிங்லா, 682 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 678 மதிப்பெண்களோடு மும்பையைச் சேர்ந்த காவ்யா சந்தீப் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்திய அளவில் இறுதித் தேர்வில், அகமதாபாத்தைச் சேர்ந்த அக்‌ஷய் ரமேஷ் 616 மதிப்பெண்களை எடுத்து, முதலிடம் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார். இவர் 800-க்கு 603 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?

மாணவர்கள் தங்களின் வரிசை எண், பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இறுதித் தேர்வு முடிவுகளை https://icai.nic.in/caresult/final/ என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். அதேபோல, இடைநிலைத் தேர்வு முடிவுகளை https://icai.nic.in/caresult/ipc/ என்ற இணைய முகவரி மூலம் அறியலாம். 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

இதையும் வாசிக்கலாம்: College Fees Refund: இந்த மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி தாங்க.. யுஜிசி அதிரடி உத்தரவு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget