CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
ICAI CA Final Result May 2026: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதம், டாப்பர்கள் லிஸ்ட் குறித்து இங்கே அறியலாம்.

ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்திய சி.ஏ (CA) இறுதித் தேர்வுக்கான முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஆடிட்டர் ஆக நடத்தப்படும் சிஏ இறுதித் தேர்வுக்கான குரூப் 1 தேர்வு மே 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளிலும் குரூப் 2 தேர்வு மே 8, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- இதற்கான தேர்வு முடிவுகளை மாணவர்கள் caresults.icai.org என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து காணலாம்.
- அல்லது, தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை icai.nic.in அல்லது icaiexam.icai.org ஆகிய இணையதளங்களில் சென்று பார்க்கலாம்.
- முதலில் தங்களது பதிவு எண் மற்றும் ரோல் எண்ணை உள்ளிட்டுப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்.
முடிவுகள் வெளியானவுடன் இணையதளத்தில் அதிக பயன்பாடு இருந்ததால் சிலருக்கு முடிவுகளைப் பார்ப்பதில் சிறு தொழில்நுட்பத் தாமதம் ஏற்பட்டது. சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், தேர்ச்சி விகிதம், டாப்பர்கள் லிஸ்ட் குறித்து இங்கே அறியலாம்.
முதலிடம் யாருக்கு?
சி.ஏ இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து நூர் சிங்லா அபார சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 83.17 சதவீத மதிப்பெண்களுடன் அசத்தி உள்ளார். பட்டியாலாவைச் சேர்ந்த நூர் சிங்லா அகில இந்திய அளவில் முதலிடம் (AIR 1) பிடித்துள்ளார். அவர் 600 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 83.17 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலில் ஹவுராவைச் சேர்ந்த ரிதிஜ் சராஃப் 79.17 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் டெம்பிவ்லியைச் சேர்ந்த சோஹன் அனில் மஞ்ரேக்கர் 78.83 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தேர்ச்சி விகிதம் எப்படி?
சிஏ இறுதித் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை குரூப் 1 தேர்வை மொத்தம் 54,606 பேர் எழுதிய நிலையில், 6,555 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 12 ஆகும்.
அதேபோல குரூப் 2 தேர்வை மொத்தம் 42,573 பேர் எழுதிய நிலையில், 8,725 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 20.49 ஆகும்.
இரு குரூப் தேர்வுகளையும் மொத்தம் 23,776 பேர் எழுதிய நிலையில், 3,345 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி விகிதம் 14.07 ஆகும்.
இந்த இறுதித் தேர்வு முடிவுகளின் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 7 ,931 புதிய சி.ஏ. தொழில்முறையாளர்கள் உருவாகியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















