Higher Education Guidance: உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி; எங்கெல்லாம்? கலந்துகொள்வது எப்படி?
உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வது எப்படி? காணலாம்.

உயர் கல்வி படிப்பைத் தொடராத மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் " கல்லூரி கனவு நிகழ்ச்சி " நடைபெற உள்ளது எனவும் அதில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு / சென்னை /ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2022- 23 மற்றும் 2023- 24 ஆம் கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத/ தேர்வு எழுதாத/ இடைநின்ற மாணவர்களில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத / உயர் கல்விக்கு விண்ணப்பித்து பல்வேறு காரணங்களினால் கல்லூரியில் சேராமல் 5666 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உயர் கல்வி படிப்பைத் தொடரத் தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு நிகழ்ச்சி" மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
சென்னை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் - பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.
கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெறும் நாள் இன்று (14.5.2025)- அடையார், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஒன்றியங்கள்
கல்லூரி கனவு நிகழ்ச்சி நடக்கும் இடம்- அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம்
16.5.25 - அடையார், கோடம்பாக்கம் ஒன்றியங்கள்- செயின்ட் பீட்ஸ் அகாடமி, சீனியர் செகண்டரி பள்ளி, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை.
19.5.25 - திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஒன்றியங்கள் - வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்
20.5.25 - அண்ணா நகர், இராயபுரம் தெற்கு, இராயபுரம் வடக்கு, தேனாம்பேட்டை ஒன்றியங்கள் - செயின்ட் பீட்ஸ் அகாடமி, சீனியர் செகண்டரி பள்ளி, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை.
"கல்லூரி கனவு நிகழ்ச்சி" மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் இத்தகைய அரிய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது கல்லூரிக் கனவை நிறைவேற்றிட முகாமில் கலந்துகொள்ளுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சென்னை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்






















