மேலும் அறிய

YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் இலவச ஏஐ பயிற்சி: சான்றிதழுடன் கூடிய படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முழு விவரம்

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், இந்தியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த மத்திய அரசு, புதிய இலவச ஏஐ ஆன்லைன் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது YUVA AI என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்களை வேலைவாய்ப்பிற்குத் தயார்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும் இந்தப் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள் கற்றுத்தரப்படும். குறிப்பாக ஏஐ என்றால் என்ன, எப்படி வேலை செய்கிறது எதற்கு பயன்படுகிறது, இந்த தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்துவது எப்படி, இதன் வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து இந்த பயிற்சியில் கற்றுத் தரப்படும்.

எழுதப் படிக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் சேரலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பணிபுரிவோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் எவரும் இதில் இணைந்து பயன்பெறலாம். இந்தப் பயிற்சியை முடிக்க மொத்தம் 4.5 மணி நேரம் ஆகும்.

சான்றிதழ் பெறுவது எப்படி?

ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் முழுப் பாடத்திட்டங்களையும் படித்து முடித்த பின், சிறிய தேர்வு நடத்தப்படும். அதனை வெற்றிகரமாக முடித்தவுடன், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?


இந்தப் பயிற்சியில் சேர கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

  1. முதலில், அரசின் அதிகாரப்பூர்வ திறன் மேம்பாட்டு இணையதளத்திற்குச் (Skill India Digital Portal) செல்ல வேண்டும். அல்லது https://www.futureskillsprime.in/course/yuva-ai-for-all/ என்ற இணைப்பை க்ளிக் செய்து உள்ளே செல்லலாம்.
  2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள Register என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  3. அதில் உங்களது பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட வேண்டும்.
  4. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை உள்ளிட்டுப் பதிவை உறுதி செய்ய வேண்டும்.
  5. கணக்கு உருவாக்கப்பட்ட பின், தளத்தில் உள்ள AI Course தேர்வு செய்து Enroll என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  6. அதன் பின்னர் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளைப் பார்க்கத் தொடங்கலாம்.

எவ்வித முன் அனுபவமும் இன்றி இலவசமாகக் கற்றுக்கொள்ளக் கிடைக்கும் இந்த வாய்ப்பு, மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்குப் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget