மேலும் அறிய

CM Stalin: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு, புதுமைப்பெண் திட்டங்கள்- முதல்வர் பரிசீலனை

அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌ குறித்து நல்ல செய்தி வெளிவரும்‌.

அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌ குறித்தும் கிராமப் புறங்களில்‌ உள்ள அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ முதலமைச்சரின்‌ காலைச்‌ சிற்றுண்டி திட்டம்‌ விரிவாக்கம்‌ குறித்தும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ பரிசீலிக்கப்படும்‌ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது:

’’அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்‌ (ஹை டெக் Labs), வானவில்‌ மன்றம்‌, தேன்‌ சிட்டு மலர்‌, கலைத் திருவிழா போன்ற திட்டங்கள்‌ படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாகப்‌ பரிசீலிக்கப்படும்‌.

புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌

அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ பயின்ற மாணவிகள்‌ புதுமைப் பெண்‌ திட்டத்தில்‌ சேர்த்தல்‌ குறித்து நிதி நிலை அறிக்கையில்‌ நல்ல செய்தி வெளிவரும்‌.

கிராமப் புறங்களில்‌ உள்ள அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ முதலமைச்சரின்‌காலைச்‌ சிற்றுண்டி திட்டம்‌ விரிவாக்கம்‌ குறித்து வரும்‌ நிதிநிலை அறிக்கையில்‌ சாதகமாக பரிசீலிக்கப்படும்‌.

அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌பள்ளிகளில்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர்‌நிர்ணயம்‌, பணி நியமனங்களுக்கு ஒப்புதல்‌ அளித்தல்‌, பணியிட மாற்றங்கள்‌ மற்றும்‌ பதவி உயர்வுகள்‌ குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்‌.

உச்ச வயது வரம்பு

பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ அனைத்து வகையான ஆசிரியர்கள்‌ நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும்‌, இதரப் பிரிவினருக்கு 58 எனவும்‌ நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசின்‌ நிதியுதவி பெறும்‌ சிறுபான்மையினர்‌ பள்ளிகளுக்கும்‌ விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள்‌ ஆராயப்படும்‌.

சிறுபான்மையினரின்‌ கல்லூரி ஆசிரியர்‌ பணியிடங்களில்‌, யு.ஜி.சி. மற்றும்‌ அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அரசால்‌ மூன்று மாத காலத்திற்குள்‌ நியமன அங்கீகாரம்‌ அளிக்கப்படும்‌.

மாநில்‌ அரசால்‌ கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்‌ மதசார்பு சிறுபான்மையினர்‌ அந்தஸ்து சான்றிதழ்‌ தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில் இச்சான்றிதழ்‌ காலம்‌ குறிப்பிடப்படாமல்‌ நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்.

பிரத்யேக இணையதளம்

சமூகநலத்‌ துறை, ஆதி திராவிடர்‌ நலத்‌ துறை, மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலத்‌ துறை ஆகிய துறைகளின்‌ கீழ்‌ உதவி பெறும்‌, அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப்‌ பதிவு செய்தல்‌, உரிமங்களைப்‌ புதுப்பித்தல்‌, நிதியுதவி  மற்றும்‌ மானியங்களைப்‌ பெறுவதற்கான நடைமுறைகள்‌ஆகியவை எளிமைப்படுத்தப்படும்‌. இதற்கென பிரத்யேகமாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
இனி 1 ஹவர்தான்; 7 மணிக்கு பின் நோ! செல்போன், இணைய மோகத்தை கட்டுப்படுத்த புதிய கொள்கை வெளியீடு
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
Thervukalam App: போட்டித் தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! தேர்வுக்களம் செயலி- TNPSC, TRB, TNUSRB தேர்வுகளுக்கு ரெடியாகுங்க!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
RRB NTPC தேர்வு முடிவுகள் எப்போது? 18 மாதங்களாக காத்திருக்கும் தேர்வர்கள்! ட்ரெண்டாகும் கோரிக்கை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
MK Stalin Vs Modi :
"கோவிட் காலத்தைப் போல" மோடியின் பேச்சு..! பீதிக்கு உள்ளான பொதுமக்கள்- கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Iran War US 15 Point Plan: இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
Embed widget