மேலும் அறிய

Flu Spike In TN: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

தமிழகத்தில் குழந்தைகள் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பதிலளித்துள்ளார். 

தமிழகத்தில் குழந்தைகள் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பதிலளித்துள்ளார். 

அண்மைக் காலமாக தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவி வருகிறது. 

புதுச்சேரியில் பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக 150 குழந்தைகள் உட்பட 192 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சலில் எந்தவித வைரஸும் கண்டறியப்படாத நிலையில், அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு செப்.25ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ளனர். 

ராமதாஸ் கூறும்போது, ’’தமிழ்நாட்டில் சளிக் காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க  சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.  3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும்  என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல!

காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம்.  பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது  என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர்!

மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது  மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.  எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்  என மீண்டும் வலியுறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்திருந்தார்.

Flu Spike In TN: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

இந்த நிலையில் தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தனித்து முடிவெடுக்க முடியாது. முதலமைச்சர், பொது சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துபேசி உரிய முடிவெடுப்பார்.

வழக்கமாக சுகாதார நெருக்கடி காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்க முதல்வர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையுடன் இணைந்து கூட்டம் நடைபெறும். அதில், ‘முகக் கவசம் அணிய வேண்டும். அருகருகில் அமராமல், இடைவெளி விட்டு அமர வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். விடுமுறை அளிக்கலாம்’ என்றெல்லாம் ஆலோசனைகள் அளிப்பர். 

இவற்றை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் சேர்த்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக வெளியிடும். இந்த நிலையில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து என்ன அறிவுறுத்தல் வருகிறதோ, அதைப் பின்பற்றுவோம்.'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க: Flu in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்; காரணம் என்ன? மருந்துகள், தடுப்பது எப்படி? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget