மேலும் அறிய

Engineering Counselling: தொடங்கியது பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு..! - நிரப்பப்பட உள்ள இடங்கள்?

Engineering Counselling: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது.

Engineering Counselling: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ள முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க, 26 ஆயிரத்து 654 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 3 வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ள சூழலில், துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு பெறுகிறது.

கலந்தாய்வின்போது விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.

முடிந்த இரண்டு கட்ட கலந்தாய்வு:

மாநிலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில், 1.79 லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆன்லைன் மூலமாக நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த 10ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, இரண்டு கட்ட கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன.

குவிந்து கிடக்கும் காலியிடங்கள்:

முதற்கட்டமாக முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 22-இல் தொடங்கி ஜூலை 27 வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், அதில் 836 இடங்களில் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 198.50 கட் ஆஃப் உடன் இரண்டாவது இடத்தையும், வேலூர் மாணவர் சரவணன் 198.5 கட் ஆஃப் உடன் 3ஆவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Mahindra BE 07 Launching: ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Maruti Suzuki Dzire on EMI: ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
ரூ.1 லட்சம் வச்சுருக்கீங்களா.? அப்போ அத முன்பணமா வச்சு அற்புதமான டிசையர் கார வாங்கலாம்; EMI என்ன.?
Embed widget