மேலும் அறிய

எஸ்சி மாணவர்களுக்கு மட்டுமா கல்விக்கடன் தள்ளுபடி? திமுக வாக்குறுதி என்ன ஆனது? ராமதாஸ் குற்றச்சாட்டு!

கல்விக்கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு; அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு- பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2021 சட்டமன்ற தேர்தலின்போது, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழக மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடனை செலுத்த இயலாவிட்டால் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும்” என திமுக 159-வது  தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
 
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, முன்னுரிமைத் துறை கடனின் கீழ் வங்கிகளின் நிலுவையில் உள்ள கல்விக் கடன் இலாகா டிசம்பர் 31, 2023 நிலவரப்படி ரூ.11,122.65 கோடியாக இருந்தது, இது செப்டம்பர் 2023 நிலவரப்படி ரூ.11,589.93 கோடியிலிருந்து ரூ.467 கோடி குறைந்துள்ளது. முன்னுரிமைத் துறை கடனின் கீழ் கல்விக் கடன் வாராக்கடன் டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.4,123.91 கோடியாக இருந்தது. மாநிலத்தில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை ரூ.2,857.75 கோடி கல்விக் கடன்களை அனுமதித்துள்ளன. மேலும் கடன்கள் (முந்தைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டவை உட்பட) ரூ.2,064.06 கோடி வரை வழங்கப்பட்டுள்ளன என்று தரவுகள் காட்டுகிறது.

கல்விக் கடன் உயர்வு
 
2017 ஜூன் மாதம் அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2013 –ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8,86,752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.16,313.06 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9,60,202 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013 -லிருந்து 2015-ம் ஆண்டு 22.3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
 
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் ரூ.1,50,478 யாக இருந்தது. அது 2015-ல்  ரூ.1,69,892 யாக மட்டுமே உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் வெறும் 13 சதவீதம்தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
 
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ''வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்'' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதல்வர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

இன்றைக்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
 
ஆனால், தமிழக அரசு கடந்த 3.2.2025-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 மற்றும்  2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும் என வலிறுறுத்திய முதல்வர் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால் திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 
 
மேலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகாலமாக கல்விக்கடன் நிலுவையில் உள்ளதால் வங்கிகள் வாராக்கடன்கள் முடிவு செய்துள்ளதை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது  நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Embed widget