மேலும் அறிய

Education Budget Highlights: மாணவர்களே அலெர்ட்...! கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட முக்கிய 10 பட்ஜெட் அறிவிப்புகள்

Education Budget 2023 Highlights Tamil: நாடு முழுவதும் 157புதிய நர்சிங் கல்லூரிகள், டிஜிட்டல் நூலகங்கள், ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

நாடு முழுவதும் 157புதிய நர்சிங் கல்லூரிகள், டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். ஏகலைவா மாதிரிப் பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கல்வித் துறை சார்ந்த அறிவிப்பில் வெளியாகி உள்ளன. 

நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பட்ஜெட்டில் கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகளில் முக்கிய அம்சங்களைக் காணலாம். 

’’1. நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2014 முதல் அமைக்கபட்ட157 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து இவை முக்கிய இடங்களில் அமைக்கப்படும். 

2.2047-ல் 0 முதல் 40 வயது வரையிலான மக்களுக்கு இரத்த சோகையை முற்றிலும் ஒழிக்கத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். 

3.மருத்துவத் துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் உருவாக்கப்படும். ஆராய்ச்சித் துறை மேம்படுத்தப்படும்.

4.ஐசிஎம்ஆர் ஆய்வகங்களை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

Education Budget Highlights: மாணவர்களே அலெர்ட்...! கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட முக்கிய 10 பட்ஜெட் அறிவிப்புகள்

5.தரமான புத்தகங்களுடன் தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும். கொரோனா கால கற்றல் இழப்பைக் குறைக்க, நாடு முழுவதும் பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இவை உதவிகரமாக அமையும். 

6.ஆசிரியர் பயிற்சித் திட்டம் புத்தாக்க முறையில் மேம்படுத்தப்படும். ஐசிடி முறை அமல்படுத்தப்படும். 

7.பழங்குடியின பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மத்திய அரசு சார்பில் நியமனம் செய்யப்படுவர். இதன் மூலம் 740 ஏகலைவா பள்ளிகளில் படிக்கும் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும்.

8.எழுத்தறிவு சார்ந்து இயங்கும் தனியார் என்ஜிஓக்களுடன் இணைந்து பாரம்பரிய நூலகங்கள் மேம்படுத்தப்படும். நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் எழுத்தறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும். 

9.கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். 

10.பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில், 5ஜி செயலிகளுக்கு 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்’’. 

இவ்வாறு மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget