மேலும் அறிய

அரசுக்கு தமிழ் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளதா?- தமிழ்வழிக் கல்வியை மறுப்பது ஏன்?- அன்புமணி கேள்வி

அரசுக்கு உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழ்நாட்டில் உள்ள 6,218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்களை மேம்படுத்தவும்,  ஆண்டுக்கு மூன்று முறை தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகளை நடத்தவும்  ஒரு பள்ளிக்கு  ரூ.9000/- வீதம் மொத்தம் ரூ. 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.  தமிழ்மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம், தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் குறித்து மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, தமிழை மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடிக்க முடியும் என்பது மட்டுமின்றி, பட்டமும் பெற முடியும் என்ற நிலைதான் இன்று வரை நீடிக்கிறது.  தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவதற்கான சட்டம் கடந்த 2006-ம் ஆண்டே நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட அந்த சட்டம் இன்று வரை நடைமுறைக்கு வராதது நல்வாய்ப்புக் கேடானது.

ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்த அவலம்

இந்தியாவின் பல மாநிலங்களில் அம்மாநிலத்தின் தாய்மொழிதான் கட்டாயப் பயிற்று மொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்காக 101 தமிழறிஞர்கள் சென்னையில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டனர். அதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதை செயல்படுத்த முடியவில்லை. தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்த அவலம் தமிழ்நாட்டில்தான் நடந்தது.

தமிழ் பயிற்றுமொழி, தமிழ் கட்டாயப் பாடம் ஆகிய பெருங்குறைகளை சரி செய்யாமல், தமிழ் மன்றங்களை மேம்படுத்துவதாலோ, தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகளை நடத்துவதாலோ மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை ஏற்படுத்த முடியாது.  தமிழில் பயிற்றுவிப்பதன் மூலமாகவும்,  தமிழை படிக்கச் செய்வதன்  மூலமாகவும் மட்டும்தான் மாணவர்களையும்,  தமிழையும் இரண்டறக் கலக்கச் செய்ய முடியும். எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக நடத்தி தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அதேபோல்,  தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்க புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கான ஸ்மார்ட் பலகை? குவியும் கண்டனம்
முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கான ஸ்மார்ட் பலகை? குவியும் கண்டனம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
ஊசலாடும் உயர்கல்வித் துறை! கண்டுகொள்வாரா காங்கிரஸ் அமைச்சர்? பாஜக கேள்வி
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!
Puducherry University : புதுச்சேரி பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் இரட்டைச் சாதனை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கான ஸ்மார்ட் பலகை? குவியும் கண்டனம்
முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கான ஸ்மார்ட் பலகை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
Nissan Tekton: நிஸான் டெக்டானை சொந்தமாக்கலாம்; 19.4KM மைலேஜ், வெறும் ரூ.8820 EMI- 5 ஆண்டு லோன், கால்குலேஷன்
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
Embed widget