மேலும் அறிய

"ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக அரசு: கருத்து கூறினால் ஆசிரியை சஸ்பெண்டா?" ஈபிஎஸ் கண்டனம்

திமுக அரசு ஆசிரியப்‌ பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஆசிரியப்‌ பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''மாதா, பிதா, குரு, தெய்வம்‌ என்ற வரிசையில்‌ பெற்றோருக்குப்‌ பிறகு ஆசிரியப்‌ பெருமக்களை குருவாக நிறுத்தி, பிறகுதான்‌ தெய்வத்தை நமது முன்னோர்கள்‌ வரிசைப்படுத்தினார்கள்‌.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்களுக்கும்‌, கல்வி வளர்ச்சிக்கும்‌ முக்கியத்துவம்‌

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்‌, எதிர்கால சந்ததியினரை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்கும்‌ ஆசிரியர்களுக்கும்‌, கல்வி வளர்ச்சிக்கும்‌ முக்கியத்துவம்‌ வழங்கி பல்வேறு நலத்‌ திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டன. ஆனால்‌, இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே ஆசிரியப்‌ பெருமக்களுக்கு அறிவித்த எந்தத்‌ தேர்தல் வாக்குறுதியையும்‌ நிறைவேற்றவில்லை.

இந்நிலையில்‌, ஆசிரியை உமா மகேஸ்வரி என்பவர்‌ கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு கட்டுரைகளை சமூக வலைதளங்களில்‌ வெளியிட்டு வந்துள்ளார்‌. அவற்றில்‌ஊடகம்‌ சார்ந்த ஒரு வலைதளத்தில்‌ கல்வித்‌ துறையில்‌ பதினைந்தாயிரத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்‌ காலியாக இருப்பதாகவும்‌ 1200-க்கும்‌ மேற்பட்ட பள்ளிகள்‌ ஓராசிரியர்‌ பள்ளிகளாக இருப்பதாகவும்‌; இந்த ஆண்டு பட்ஜெட்டில்‌ கூட 3,200 கோடி ரூபாய்‌ அடிப்படை கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்‌, ஆனால்‌, ஆசிரியர் பணி நியமனம்‌ குறித்த அறிவிப்பு இருந்தால்‌ நன்றாக இருக்கும்‌ என்றும்‌, இல்லம்‌ தோறும்‌ கல்வி திட்டத்திற்கு பலநூறு கோடி ரூபாய்‌ வீணாக செலவழிக்கப்படுவதாகவும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

ஆசிரியை உமா மகேஸ்வரி தற்காலிக பணி நீக்கம்‌

எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால்‌ கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும்‌ என்று தெரிவித்திருந்த நிலையில்‌, அவரை திமுக அரசு தற்காலிக பணி நீக்கம்‌ செய்துள்ளதாக செய்திகள்‌தெரிய வருகின்றன.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்‌

கெடுப்பா ரிலானுங்‌ கெடும்‌”'

என்ற குறளுக்கேற்ப, பணியில்‌ இருந்த ஆசிரியை உமா மகேஸ்வரி‌, தமிழகக்‌ கல்விப்‌ பணி சிறக்க வேண்டும்‌ என்ற உன்னத நோக்கத்தில்‌ தனது கருத்தைக்‌ கூறினால்‌, அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அந்த ஆசிரியரை இடை நீக்கம்‌ செய்ததை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌. ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும்‌ பணி வழங்க வேண்டும்‌ என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌''.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: அரசை விமர்சிப்பது குற்றமா? அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D:  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D: 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Embed widget