மேலும் அறிய
Advertisement
தருமபுரி: அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ செல்வங்கள்; மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
கடத்தூர் அருகே அரசு நடுநிலை பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, மேளதாளத்துடன் அழைத்து, வரவேற்ற ஆசிரியர்கள்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி நடுநிலைப் பள்ளியில் அரசு பள்ளியில் சேர்க்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கிராமிய நாடக கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பொதுமக்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணர்வு பேரணி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. அப்பொழுது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று முதலாம் வகுப்பில் புதியதாக சேர்க்கப்பட்ட 5 பள்ளி குழந்தைகளுக்கு மாலை, அணிவித்தும், இனிப்பு வழங்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு சால்வை அணிவித்து மாலை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் பயணடையும் வகையில் தமிழக அரசு பள்ளியில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடம் கற்க என்னும் எழுத்தும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், தமிழ் வழி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, புதுமை பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை, வினாடி வினா,போட்டி,சிறார் திரைப்பட விழாக்கள், இலக்கியமன்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்களின் திறனை பயன்படுத்தி அவர்களின் கல்வியை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை பயன்படுத்தி அனைவரும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து பயனடைய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion