மேலும் அறிய

‛இனி கழிப்பறைகளை தான் முதலில் பார்ப்பேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

காரில் செல்லும்போது அரசுப் பள்ளிகளைப் பார்த்தால், ஆய்வுக்குச் செல்வேன். அவ்வாறு ஆய்வு செய்யும்போது கழிப்பறையைத்தான் முதலில் பார்ப்பேன்.

பள்ளிகளில் ஆய்வு செய்து மோசமான பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

‛இனி கழிப்பறைகளை தான் முதலில் பார்ப்பேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

நெல்லை டவுன் பகுதியில் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (டிச.17) காலை 11 மணிக்கு பள்ளி இடைவேளை விட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பறை மாணவர்கள் மீது தடுப்புச் சுவர்இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை வாங்க உறவினர்கள் மறுப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.

100 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இதுகுறித்துச் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டி:

''காரில் செல்லும்போது அரசுப் பள்ளிகளைப் பார்த்தால், ஆய்வுக்குச் செல்வேன். அவ்வாறு ஆய்வு செய்யும்போது கழிப்பறையைத்தான் முதலில் பார்ப்பேன். இதை ஏற்கெனவே பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். கழிப்பறை சுத்தம்தான் முதலில் முக்கியம்.

பள்ளிகள் திறக்கப்படும்போதே கழிப்பறைகள், மின்சார இணைப்புகளைத்தான் முதலில் பரிசோதிக்க உத்தரவிட்டு இருந்தோம். இனி நெல்லை பள்ளி சம்பவம் போன்று நடக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம். 

‛இனி கழிப்பறைகளை தான் முதலில் பார்ப்பேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

அடித்தளம் இல்லாமல் சுவர்

அடித்தளம் இல்லாமல் கழிப்பறை சுற்றுச்சுவர் கட்டியிருந்ததால்தான் பள்ளி கட்டிடம் இடிந்துள்ளது. நெல்லையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்குக் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இழப்பை ஈடு செய்யமுடியாது. 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பதால், எந்தப் பள்ளிகளையும் தவறவிடாமல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நோட்டீஸை ஒட்டவும் அறிவுறுத்தி இருக்கிறோம். இத்தகைய ஆய்வைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளோம். 

பள்ளிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்கள், செடிகள் வளர்ந்துள்ள கட்டிடங்கள், விரிசல் விட்டுள்ள கட்டிடங்களின் விவரங்களைக் கோரியுள்ளோம். அதை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படும்.

அத்தகைய கட்டிடங்களுக்கு மாற்றாக, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்துக் கற்பிக்கத் திட்டமிட்டு வருகிறோம். அதேபோல பொதுவான ஓர் இடத்தை  வாடகைக்கு எடுத்து, கற்பிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளிகள் மீண்டும் கட்டப்படும்வரை கற்பித்தலை நிறுத்த முடியாது. 

ஒவ்வொரு மண்டலமாகத் தேர்வு செய்து பள்ளிகள் ஆய்வு செய்யப்படும். மிக விரைவில் அதற்கான நடவடிக்கை நடக்கப்படும்''. 

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget