மேலும் அறிய

CUET Exam 2023 : மாணவர்களே.. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - எப்போது வரை தெரியுமா?

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

CUET Exam 2023 : மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

க்யூட் நுழைவுத்தேர்வு:

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக  பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  

அதன்படி இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்பட்டது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 மொழிகளில் தேர்வு:

இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை  ஜூலையிலும்  வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

இளங்களை பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வுக்கு பிப்ரவரி மாதம் முதல் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க மார்ச் 30ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். 

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் https://cuet.samarth.ac.in/என்ற இணையத்தை கிளிக் செய்யவும்.
  • முகப்பு பக்கத்தில் தோன்றும் CUET UG 2023 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
  • அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பின்னர், விண்ணப்பத்தை நிரப்பியவுடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • பொது/ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.700 மற்றும் மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமானது ரூ.650 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget