மேலும் அறிய

NEET: அரசு பள்ளியில் இலவச நீட் பயிற்சி; அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

NEET Exam: சிதம்பரத்தில் உள்ள மூன்று மையங்களில் மொத்தமாக 168 மாணவர்கள் பயிற்சியில் கலந்துக் கொண்டு தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் இலவசமாக நடத்தப்பட்டும் நீட் தேர்வு பயிற்சி, மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகிறதா என கடலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், கான்சாகிப் வாய்க்கால் தடுப்புச்சுவர், சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பு, கனகசபை நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, மானாசந்து மற்றும் சம்பந்தகாரதெரு அங்கன்வாடி மையங்கள், கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் திடீஞ ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில்.,

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட கமலீஸ்வரன் கோயில் தெருவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் திருக்கோயிலுக்கு ஏராளமான ஆன்மிக பக்தர்களும், பொதுமக்களும் வந்துசெல்வதால் அவர்களின் தற்போதைய தேவைக்கேற்பவும், எளிதில் பாதுகாப்பான முறையில் வந்துசென்றிடவும், நியாயமான கட்டணத்தில் அனைத்து நவீன அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகன நிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

NEET நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆய்வு 

கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் NEET நீட் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மையங்களில் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 1 முதல் மே 2 வரை நடைபெறுகிறது.  இச்சிறப்பு வகுப்பு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மூன்று மையங்களில் மொத்தமாக 168 மாணவர்கள் பயிற்சியில் கலந்துக் கொண்டு தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் ஆய்வு 

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே கான்சாகிப் வாய்க்கால் இடது கரையில் 310 மீட்டர் நீளத்தில் ரூபாய் 9.00 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ஆய்வு 

கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மாலைகட்டிதெரு நகராட்சி நடுநிலைப் பளிளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், ஸ்மார்ட் வகுப்பின் வாயிலாக மாணாக்கர்களுக்கு கற்பிக்கும் முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது. மேலும், தேர்ச்சி விகிதம் குறைவான மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள் வழங்கி தனிகவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  தொடர்ந்து, வடக்கு வீதி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற வகுப்பில் மாணவர்களின் வாசித்தல் மற்றும் புரிதல் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அங்கன்வாடி மையங்கள் வளரும் பச்சிளங்குழந்தைகள் நல்ல முறையில் ஆரம்ப கல்வி பயிலவும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையில் கல்வி கற்றிடும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. மானாசந்து மற்றும் சம்பந்தகாரதெரு அங்கன்வாடி மையங்களில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி கற்றிடும் வகையில் கற்பித்திட ஆசிரியர்களுக்கும், பயிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க சத்துப் பொருட்களை வழங்கிட பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget