மேலும் அறிய

CTET 2024: அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகலாம்: சிடெட் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

CTET 2024: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.2) கடைசித் தேதி ஆகும். விண்ணப்பிப்பது எப்படி?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தகுதியும் விருப்பமும் வாய்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.2) கடைசித் தேதி ஆகும். 

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராக 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் பணிபுரியலாம். தேர்ச்சி பெறுவோர், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதய வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்தியன் பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியலாம். அதேபோல மாநிலங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றலாம். 

ஜூலை 7ஆம் தேதி தேர்வு

19ஆவது பதிப்பைக் காணும், 2024ஆம் ஆண்டுக்கான சிடெட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதற்குத் தேர்வர்கள் இன்று (ஏப்ரல் 2ஆம் தேதி) நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

ரூ.1200 கட்டணம்

தேசிய தகுதித் தேர்வை எழுத பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://ctet.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அல்லது https://examinationservices.nic.in/examsysctet/Root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNlCCcscwykbysLsSXnWv0wO என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம். அதில் விண்ணப்ப எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பிக்கல வேண்டும்.

* முதல்முறை விண்ணப்பிப்பவர்கள், முன்பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். 

* முழுமையான கையேட்டுக்கு தேர்வர்கள், https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2024/03/2024030749.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.

நாடு முழுவதும் 20 மொழிகளில் 135 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டம், மொழி, தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் மற்றும் முக்கியத் தேதிகள் உள்ளிட்ட விவரங்கள்,  https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 

வேறு ஏதேனும் தகவல்களைப் பெற விரும்பினால் https://ctet.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget