மேலும் அறிய

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு: அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 2021-22-ஆம் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS-இல் பதிவேற்றம் செய்ய வேண்டும். 2021-22-ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 கிலோமீட்டர் தொலைவில் தொடக்கப்பள்ளிகளும், 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தாண்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 மாணவர்களைச் சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில், அவர்கள் அரசுப்பள்ளியை நாடுகிறார்கள். அவ்வாறு அரசுப்பள்ளிக்கு வரும் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 2021-22ம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கால அட்டவணை தயார் செய்து தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

கல்வித்தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகின்றன என்ற தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் ஹை-டெக் லேப் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் பி.எப்.எம்.எஸ். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பள்ளிக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டும்.

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளுக்கு தேவையான கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பள்ளிக்கல்வி 2020-21-ஆம் கல்வி ஆண்டில் பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும், அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா? அவர் கற்பிக்கும் பாடத்தை அவர் நன்கு புரிந்து பாடம் நடத்துகிறாரா? என்றும் பார்க்க வேண்டும்.

கல்வித்தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும். அரசின் அறிவிப்பின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget