நாட்டின் முதல் விர்ச்சுவல் பள்ளி டெல்லி அரசுடையதா?- கேஜ்ரிவால் பேச்சால் சர்ச்சை
டெல்லி அரசு சார்பில் நாட்டின் முதல் விர்ச்சுவல் பள்ளி தொடங்கப்பட்டதாக, முதல்வர் கேஜ்ரிவால் கூறியதற்கு என்ஐஓஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி அரசு சார்பில் நாட்டின் முதல் விர்ச்சுவல் பள்ளி தொடங்கப்பட்டதாக, முதல்வர் கேஜ்ரிவால் கூறியதற்கு என்ஐஓஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கல்வி அடுத்தடுத்த கட்டங்களை எட்டி வருகிறது. குரு குலக் கல்வி, வீடுகளில் கல்வி, பள்ளிகளில் கல்வி என்று கற்பித்தல் முறை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. சீனாவில் தொடங்கி உலகம் முழுக்கப் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, ஆன்லைன் கல்வி முறையை அறிமுகம் செய்தது.
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அனைவரும் படிக்கும் வகையில், டெல்லியில் மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நேற்று (ஆகஸ்ட் 31ஆம் தேதி) மெய்நிகர் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். இந்தப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் படிக்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை நேற்று (ஆகஸ்ட் 31ஆம் தேதி) தொடங்கியது.
பள்ளிகளைத் தொடங்கி வைத்தபிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசும்போது, ’’நாட்டிலேயே முதல்முறையாக விர்ச்சுவல் பள்ளிகள் எனப்படும் மெய்நிகர் பள்ளிகளைத் தொடங்கியுள்ளோம். இதற்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் அனைவரும் இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம். திறன் வாய்ந்த நிபுணர்களின் உதவியுடன் நீட், க்யூட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும். நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப் பெற்றுள்ள மெய்நிகர் பள்ளி, நிச்சயம் கல்வித் துறையில் ஒரு மைல் கல்லாக அமையும்’’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இதைக் குறிப்பிட்டு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதற்கு, என்ஐஓஎஸ் எனப்படும் தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி நிறுவனம் - National Institute of Open Schooling (NIOS) மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்ஐஓஎஸ் கூறும்போது, ’’நாட்டின் முதல்நிலை விர்ச்சுவல் பள்ளி கடந்த ஆண்டே மத்திய அரசால் தொடங்கப்பட்டது. டெல்லி அரசால் செப்டம்பர் 31ஆம் தேதி தொடங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் மெய்நிகர் பள்ளிகளைத் தொடங்கி வைத்தார். தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின்கீழ் 7 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை முழுக்க முழுக்க கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
1,500 கல்வி மையங்கள், திறன் வாய்ந்த தொழிற்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. இவை அனைத்தும் என்ஐஓஎஸ் மெய்நிகர் பள்ளிகளில் படிப்போருக்கு வழங்கப்படுகின்றன. இவற்றுடன் நேரலையில் கலந்துரையாடும் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன’’ என்று என்ஐஓஎஸ் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்
GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
வகுத்தல் பாடம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியை; ஆட்சியர் செய்த அதிரடி