மேலும் அறிய

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அழிக்க சதி? ஆசிரியர்களின் உரிமை பறிப்பு! அன்புமணி கண்டனம்

இவை அனைத்தும் அரசு உதவிபெறும்  கல்லூரிகளை திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் அரச சதியின் அங்கமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் அரசு பாகுபாடு காட்டி வருகிறது.

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

ஏன் இந்த பாரபட்சம்?

அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு (Career Advancement Scheme - CAS) எனப்படும் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் அதே ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த உரிமை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில் 4 ஆண்டுகளிலும், இல்லாவிட்டால் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கேற்ற வகையில் ஊதியத்தின் அளவும் ஒரு நிலை உயர்த்தப்பட வேண்டும். அதன்பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை உதவிப் பேராசிரியர்களுக்கு தேர்வு நிலை உதவிப் பேராசிரியர்களாகவும், அந்த நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் நிலை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.

வேதனையான உண்மை

பொதுவாக கல்லூரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப் படுவதில்லை. அதனால், அவர்கள் இணைப் பேராசிரிரியர்கள், அதற்கு அடுத்தபடியாக முதல்வர்கள் என்ற நிலையில் திருப்தியடைய வேண்டியுள்ளது.  இதுவும் கூட உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையான உண்மையாகும்.

சில கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு விதிகளின்படி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், எந்த நாளில் இருந்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதோ, அதே நாளில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பெரும்பாலான உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில்  உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டும்தான்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.

பதவி உயர்வு பயன்கள்

ஊதிய உயர்வுடன் கூடிய முழுமையான பதவி உயர்வு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப் படவில்லை; மாறாக மாணவர்களின் உயர்கல்வி ஆராய்ச்சியும் பாதிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்போது, அது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பில் (IFHRMS)  சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் பதவி உயர்வுக்கான நிதிப் பயன்களும், அதிகாரங்களும் கிடைக்கும். இந்த அமைப்பில் சேர்க்கப்பட்ட இணைப் பேராசிரியர்களால் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இணைப் பேராசிரியர் பதவி உயர்வு இந்த அமைப்பில் சேர்க்கப் பட்டிருந்தால், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து அரசு செய்த துரோகத்தால் மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை கடந்த ஜூன் 23ஆம் தேதி அழைத்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஜூலை மாத ஊதியப் பட்டியலில் அவர்களின் ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.

இவை அனைத்தும் இயல்பாகவோ, இயலாமையாலோ நடந்தவையாகத் தோன்றவில்லை. உதவிபெறும்  கல்லூரிகளை திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் அரச சதியின் அங்கமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் ஆபத்தான சட்டத்தை திமுக கொண்டு வந்தது.

சாகும்வரை உண்ணாநிலை போராட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்றது. அந்த சட்டத்தை திமுக கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ, அதே நோக்கம்தான் ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்காமல் முடக்கி வைப்பதற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முழுமையான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை டிசம்பர் 12ஆம்  தேதி முதல் நடத்தவிருக்கும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும்  அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’ என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget