மேலும் அறிய

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி: மாணவர் சேர்க்கை இடங்களை 50% அதிகரிக்கக் கோரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால், மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்காக நேற்று வரை 1.81 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.  இம்மாதம் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விண்ணப்பதாரர்களில் எண்ணிக்கை 3 .5 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு கல்லூரிகளில் சேருவதற்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது  மகிழ்ச்சியளிக்கிறது.  ஆனால், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

40 சதவீதத்துக்குக் கூட இடம் கிடைக்காது

தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் 140 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இது விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகும். விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 25% உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது.  அவ்வாறு உயர்த்தப்பட்டாலும் கூட விண்ணப்பித்த மாணவர்களில் 40 விழுக்காட்டினருக்குக் கூட அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காது.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடந்த 2022- 23ஆம் ஆண்டில் 2.98 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2023 -24 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.02 லட்சமாக அதிகரித்தது. நடப்பாண்டில் இது 3.50 லட்சத்தைக் கடக்கக்கூடும். ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் சார்பில் இன்றுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உயர்கல்வி கற்க முடியாது

அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல்.  கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் சார்ந்த படிப்புகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்தப் பாடப்பிரிவு இன்னும் தொடங்கப்படாதது மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இந்த ஏமாற்றம் போக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களின்  பெரும்பான்மையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில்  அக்கல்லூரிகளின்  மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும். அதேபோல், குறைந்தது 50 கல்லூரிகளிலாவது நடப்பாண்டிலேயே செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளைத் தொடங்க வேண்டும். அதற்கேற்ற வகையில் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஏழை மாணவ, மாணவியர் அரசு கல்லூரிகளில் சேர்வது உறுதி செய்யப்பட வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
சிவகங்கை: அனுமதியற்ற 16 மழலையர் பள்ளிகள் மூடல்.. குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை !
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget