7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்; 4 பேருக்குப் பதவி உயர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர்களாக இருந்த 4 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக இருந்த 4 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள குரூப் 3-ஐச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
|
வ.எண். | அலுவலரின் பெயர் மற்றும் தற்போது பணிபுரியும் பணியிடம் | பணியிட மாறுதல் அளிக்கப்படும் அலுவலகம் |
1 | ஆர்.சுவாமிநாதன், முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை | முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை. |
2 | நசருதீன், முதன்மைக் கல்வி அலுவலர், நீலகிரி | முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல். |
3 | பிஏ.ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலர், திருவள்ளூர் | துணை இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை |
4 | எஸ்.மணிவண்ணன் முதன்மைக் கல்வி அலுவலர், சிவகங்கை | முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை. |
5 | எஸ்.சத்தியமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை | நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி | சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர். |
6 | வி.வெற்றிச்செல்வி, துணை இயக்குநர் நிர்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை | முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம். |
7 | ஆர்.திருவளர்ச்செல்வி, முதன்மைக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம். | முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர். |
2. பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள குரூப் 3ஐ-ச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் தற்போது காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவின் அடிப்படையில், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி குரூப் 4-ஐச் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் பணி முதுநிலையில் முந்துரிமையில் உள்ள கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 பிரிவு 47(-ன்கீழ் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்து, அவர்கள் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த
பணியிடங்களில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.
கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும் இத்தற்காலிக பதவியுயர்வு பின்வரும் காலத்தில் முன்னுரிமை கோரும் உரிமையை அவர்களுக்கு அளிக்காது என்ற நிபந்தனைக்குட்பட்டது.
இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்