மேலும் அறிய

மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?

எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்கள் வந்திருப்பதாக பிளஸ் 2 மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்குப் பிறகு மாணவர்களின் மதிப்பெண்கள் அதிகரித்தால் சிபிஎஸ்இ முழுக் கட்டணத்தையும் திருப்பி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு நாளை (மே 19) அன்று தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான புதிய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் எனப்படும் கணினித் திரை மதிப்பீட்டு முறையின் கீழ், மாணவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பி வழங்கும் வசதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில், எதிர்பார்த்ததை விடக் குறைவான மதிப்பெண்கள் வந்திருப்பதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ கூறுகையில், "மறுமதிப்பீட்டிற்குப் பிறகு மதிப்பெண்கள் அதிகரிக்கும் மாணவர்களுக்கு முழுப் பணமும் திருப்பித் தரப்படும். இது மதிப்பீட்டுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, நேர்மையை உறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் சஞ்சய் குமார் மறுமதிப்பீட்டுக் கட்டணம் குறித்துப் பேசும்போது, "தங்கள் விடைத்தாள்களைப் பார்க்க விரும்பும் எந்தவொரு மாணவரிடமிருந்தும் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்; அவர்கள் தங்கள் தாள்களைச் சரிபார்க்க விரும்பினால் தனியாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்; மேலும், ஏதேனும் குறிப்பிட்ட கேள்விக்கான விடையை மீண்டும் சரிபார்க்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மறுமதிப்பீட்டு முறை

மறுமதிப்பீட்டு முறையானது, மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மதிப்பாய்வு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் கட்டமைக்கப்பட்ட செயல்முறையை மாணவர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டிற்கான கோரிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்கள் தங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதை இந்தச் செயல்முறை உறுதி செய்கிறது .

சரிபார்ப்பு மற்றும் மறுகூட்டல் செயல்முறைக்குப் பிறகு, பாட நிபுணர் குழு அதனை மதிப்பாய்வு செய்து இறுதி முடிவைத் தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 19, 2026 அன்று தொடங்க உள்ளது. மாணவர்கள் இதற்கு மே 22 வரை விண்ணப்பிக்கலாம். சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பப் பதிவு மே 26 முதல் 29, 2026 வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget