மேலும் அறிய

CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி

CBSE Class 10th Result 2026: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், டிஜிலாக்கரில் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

CBSE Class 10th Result 2026: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மாணவர்கள் செய்ய வேணிடியது என்னவென்று கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பல்வேறு தகவல்களில், இன்று (ஏப்.14) தேர்வு முடிவுகள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாக்வில்லை. அதேநேரம், டிஜிலாக்கர் தளமானது சிபிஎஸ்இ 10ன் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பான பதிவில், “தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திருக்காதீர்கள். டிஜிலாக்கர் கணக்கை இன்றே தொடங்குங்கள் பின்பு முடிவுக்காக காத்திருங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, APAAR கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக அதனை தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அந்த கணக்கை கொண்டிருக்கும் மாணவர்கள், தேர்வு முடிவுகள் வெளியானதுமே வெளியிடப்பட்ட ஆவணங்கள் பிரிவில் தங்களது மதிப்பெண் பட்டியலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

APAAR கணக்கை தொடங்குவது எப்படி?

APAAR என்றால் ஆட்டோமேடட் பெர்மனெண்ட்  அகாடெமிக் அக்கவுண்ட் ரிஜிஸ்ட்ரி என்பதன் சுருக்கமாகும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும் ”ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை” எனும் முன்முயற்சியின் கீழ் தொடங்கப்பட்ட தனித்துவமான 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டையாகும். இது மழலையர் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலான ஒருவரது அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் பெற உதவும் ஒரு டிஜிட்டல் லாக்கராகும். இந்த கணக்கை தொடங்குவதற்கான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

  • டிஜிலாக்கர் போர்ட்டல் அல்லது செயலியை திறக்கவும்
  • மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை கொண்டு பதிவு/லாக் - இன் செய்யுங்கள்
  • ஒடிபி அடிப்படையிலான உறுதிப்படுத்தலை பூர்த்தி செய்யுங்கள்
  • APAAR அல்லது அகாடெமிக் பேங்க் ஆஃப் க்ரெடிட் செக்‌ஷன் எனும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
  • மாணவர் தொடர்பான தேவையான விவரங்களை பதிவு செய்யுங்கள்
  • APAAR கணக்கை தொடங்கி அதனை உங்களது கல்வி சான்றுகளுடன் லிங்க் செய்யுங்கள்

டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், டிஜிலாக்கரிலிருந்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

  • டிஜிலாக்கர் வெப்சைட் அல்லது செயலியை அணுகவும்
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து லாக் - இன் செய்யுங்கள்
  • வெளியிடப்பட்ட ஆவணங்கள் (Issued Docuements)  எனும் பிரிவை தேர்வு செய்யுங்கள்
  • ஆவணங்களை வெளியிட்டவர் என்ற பிரிவில் CBSE என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • ”பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் 2026” என்பதை தேர்வு செய்யுங்கள்
  • மாணவரின் ரோல் நம்பர் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்யுங்கள்
  • அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக டிஜிட்டல் முறையில் கையொப்பமிட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் டவுன் - லோட் செய்வது எப்படி?

  • சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளை அணுகவும்
  • ”சிபிஎஸ்இ 10ம் வகுப்பு 2026 தேர்வு முடிவுகள்” என்பதை க்ளிக் செய்யவும்
  • மாணவரின் ரோல் நம்பர், பள்ளியின் எண், அட்மிட் கார்ட் ஐடி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்யுங்கள்
  • ரிசல்டை பார்க்க சப்மிட் என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • எதிர்கால பயன்பாட்டிற்காக தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
Embed widget