மேலும் அறிய

CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

நீதித்துறையில் ஊழல்: NCERT பாடப்புத்தக சர்ச்சை! உச்ச நீதிமன்றத்தின் கடும் நடவடிக்கை, மன்னிப்பு ஏற்க மறுப்பு!

என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் (Corruption in the Judiciary) என்ற தலைப்பிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இதுதொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் என்சிஇஆர்டி மற்றும் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

நீதிமன்றம் ஆவேசம்

இதுதொடர்பாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அந்தப் பாடப்புத்தகத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உடனடியாகத் தடை செய்ததோடு, அனைத்து நகல்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. நீதிபதிகள், "இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் இந்த வழக்கை நாங்கள் சாதாரணமாக விடப்போவதில்லை.

இது ஒரு ஆழமான சதித்திட்டம் போலத் தெரிகிறது. அவர்கள் களங்கப்படுத்தி விட்டார்கள், இன்று நீதித்துறை ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறது," என்று தலைமை நீதிபதி தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார்.

NCERT மன்னிப்பு

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "எங்கள் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" என்ற அந்தப் பாடத்தை எழுதிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் இனி எந்த அரசுப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளித்தார்.

CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

இதற்கிடையில், NCERT வெளியிட்ட அறிக்கையில், "நீதித்துறை குறித்த தவறான தகவல்கள் எதிர்பாராமல் இடம்பெற்றுவிட்டன. இதற்காக நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம். இந்திய நீதித்துறையின் மாண்பையும், அதன் உயரிய மதிப்பையும் நாங்கள் முழுமையாக உணர்ந்து மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, 2026-27 கல்வியாண்டிற்குள் புதிய பாடம் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கப்படாத வருத்தம்

இருப்பினும், "தவறுதலாக நடந்துவிட்டது" என்று NCERT கூறிய விளக்கத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மன்னிப்பு அறிக்கையானது நீதிமன்றம் எதிர்பார்த்த அளவுக்கு உண்மையான வருத்தத்தைப் பதிவு செய்யவில்லை என்றும், இது ஒரு திட்டமிடப்பட்ட அவதூறு செயல் என்றும் நீதிமன்றம் கருதுகிறது. புத்தகத்தின் உள்ளடக்கத்தை இணையத்தில் பகிர்வதற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
Embed widget