மேலும் அறிய

Group 2, 2A Exam: மாநிலம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி: தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை - டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

TNPSC Group 2 2A Mains Exam 2023: குரூப் 2, 2 ஏ தேர்வில் வினா, விடைத் தாள்கள் மாறி வந்திருப்பதாகத் தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் 2, 2 ஏ தேர்வில் வினா, விடைத் தாள்கள் மாறி வந்திருப்பதாகத் தேர்வர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், தேர்வையே ரத்து செய்து பிறிதொரு நாளில் நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு குழப்பத்தால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுசெய்யக் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. 

இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

 55,071 பேர் எழுதும் முதன்மைத் தேர்வு

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு இன்று (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற இருந்தது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, குரூப்- 2ஏ முதன்மைத் தேர்வில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருப்பதால் தேர்வு உரிய நேரத்துக்குத் தொடங்கப்படவில்லை.


Group 2, 2A Exam: மாநிலம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி: தேர்வையே ரத்து செய்யக் கோரிக்கை - டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?

தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும் தேர்வர்கள் தரப்பில் கூறும்போது, ''தமிழகம் முழுவதும் மிகப் பெரிய குழப்பம் நடந்திருப்பதால், அப்படியே தேர்வு நடத்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் வழங்கினாலும் எதுவும் மாறப் போவதில்லை. தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகிறோம். இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு விடைத்தாள் மாறி மாறி வந்துள்ளது. ஒரு விடைத்தாள் குறைந்தது 100 பக்கங்களை உடையது. 

55 ஆயிரம் பேர் தேர்வை எழுதும் சூழலில், பல லட்சக் கணக்கான பக்கங்களை மதியத்திற்குள் அச்சடித்துக் கொடுக்க முடியாது. அதனால் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Embed widget