மேலும் அறிய

அரசுப்பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களா? ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளை மறக்கவே மறக்காதீங்க..

அரசுப்பணிக்கு சேர நினைக்கும் இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த தேதிகளில் விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்....

அரசுப்பணிகளில் சேர்வதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பதற்கான பல்வேறு அரிய வாய்ப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் காத்திருக்கின்றது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக இந்தத் தேதிகளில் விண்ணப்பித்துப் பயன்பெற்றுக் கொள்ளுங்கள்.

 அரசுப்பணிக்குச் சேர்வது என்பது அனைவரின் கனவாக இருக்கும். இதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கெல்லாம் இளைஞர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதோடு மட்டுமின்றி பல அரசுப்பணிக்களுக்கான அறிவிப்பும் பல்வேறுத் துறைகளில் இருந்து அவ்வப்போது வெளியாகும். அதன்படி, மத்திய ஆயுதக்காவல்படை, சுகாதராத்துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் தேதிகளில் எல்லாம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்நிலையில் எந்தெந்த பணியிடங்களுக்கு எந்தெந்த தேதிகளில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிந்து கொள்வோம்…


அரசுப்பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களா? ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளை மறக்கவே மறக்காதீங்க..

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31!

தமிழக ஊரக வளர்ச்சி  மற்றும் உள்ளாட்சித்துறையின்  கீழ் குறைகேள் அதிகாரியாக (Ombudsman) பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் எனவும், 68 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள், ஆப்லைன் மூலமாக  Direct of rural devolpment  and panjat raj, saidapet, panagal building,  Chennai – 600015 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியில் சேர விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இதுக்குறித்து கூடுதல் விபரங்களை https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf என்ற பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

மத்திய ஆயுதப்படை காவலில் வேலைவாய்ப்பு- ஆகஸ்ட் 31 கடைசி தேதியாக அறிவிப்பு!

மத்திய ஆயுத காவல்படையில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய ஆயுத காவல் படை, தேசிய புலனாய்வு பிரிவு, சிறப்பு அதிரடி படை , அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளதாகவும், இப்பணிக்கு சேர விரும்பும் முன்னாள் படைவீரர்கள் நேரடியாக https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் படை வீரர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மத்திய ஆயுதப்படை காவல் பணிக்கு விண்ணப்பித்த படை வீரர்கள் இதுக்குறித்த விபரங்களை திண்டுக்கல் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு; ஆகஸ்ட் 25 கடைசி தேதி!

தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்,Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Male) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Female) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu போன்ற கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு விண்ணப்பிக்கும் நபர்கள் 18-57 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிகளுக்கான விண்ணப்பத்தினை “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

 

  • அரசுப்பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களா? ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளை மறக்கவே மறக்காதீங்க..

இதோடு சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் Dispenser பணிக்கு பணிநியமனம் செய்ய அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளது. இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காலியாக உள்ள Research Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Mech/ Manufacturing/ Automobile பாடங்களில் BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்லைன் மூலம் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கான சம்பளம் ரூ.20,000/- வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2104_Advertisement%20for%20RA%20TVS%20Motor%20Company%20Limited%20Hosur%20August%202021.pdf இந்த இணையப்பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை- ஆகஸ்ட் 31 கடைசி தேதி!

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள Professor & Assistant Professor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அவர்களுக்கு தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள5 வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான மேற்கண்ட விண்ணப்பங்களை https://eci.gov.in/files/file/13619-office-memorandum-regarding-filling-up-of-various-posts-in-academic-discipline-in-iiidem-proposal-for-composite-method-of-selection-regarding/ என்ற பக்கத்தில் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்த பட்சம் குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 ஐஓசியில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி தேதி!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஐஓசியில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Trade/Technician Apprentices என 480 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 – 24 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், இவர்களுக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 19 மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Images/Advertisement_2021.pdf என்ற பக்கத்தில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget