ஜுராசிக் பார்க் எப்படி உருவானது தெரியுமா? அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் 1990 -இல் எழுதி வெளியிட்ட ஒரு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கிரைட்டனின் புதினம் வெளியாவதற்கு முன் நான்கு நிறுவனங்கள் இத்திரைப்படத்தின் உரிமைகளை வாங்க முன்வந்தன. யுனிவர்சல் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தின் உரிமையை வாங்கியது. இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத் துணையால் இப்படம் முழுமை பெற்றது. படத்தின் சந்தைப்படுத்துதல் ரூ 6.5 கோடி செலவில் நடந்தது எனக் கூறப்படுகிறது. முதன்முதலில் ஜூன் 9, 1993 இல் வாசிங்டன், டி. சி.யில் உள்ள updown திரையரங்கில் திரையிடப்பட்டது. அகாதமி விருதுகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கி, ஜான் வில்லியம்ஸின் இசையில், இன்று வரைப் பேசப்படும் ஒரு திரைப்படமாக விளங்கி வருகிறது.