இன்ஜினில் இருந்து அதிவேக முடுக்கத்துடன் வண்டி இயக்கப்படுவது, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளை கணிசமாக எரிக்கும். இதனால் மைலேஜ் கடுமையாக அடிவாங்கும்.
பெரும்பாலான பைக்குகள் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்போது மைலேஜ் நன்றாகக் கொடுக்கும். எனினும் அதிவேகத்தில் வண்டியை ஓட்டும்போது எரிபொருள் அதிகம் தீரும்
வண்டி ஓட்டும்போது பிரேக் பிடிப்பது என்பது இயல்புதான் என்றாலும் அடிக்கடி கடுமையாக பிரேக் பிடிப்பது எனர்ஜியை இழக்கச்செய்து, மீண்டும் வேகத்தைப் பெற அதிக எரிபொருள் தேவைப்படும்.
தொடர்ச்சியாக வேக அளவை மாற்றிக் கொண்டே இருந்தால் எரிபொருள் அதிகமாகத் தீரும். சீரான வேகம், பெட்டரான மைலேஜைத் தரும்.
அதி வேகத்தில் லோ கியர் என்றாலும் பிரச்சினைதான். மெதுவாகச் செல்லும்போது கியர் அதிகமாக இருந்தாலும் எரிபொருள் அதிகம் தீரும். அதிக நேரம் சும்மா இயங்க விடுவது எரிபொருளை வீணாக்கும்
வண்டியில் அதிகப் பேர் பயணம் செய்வது அல்லது அதிக எடையை ஏற்றிச் செல்வதாலும் மைலேஜ் கடுமையாகக் குறையும்.
போக்குவரத்தை முன்கூட்டியே கணிக்காத ஓட்டுநர்கள், அடிக்கடி பிரேக் போட்டும் வேகப்படுத்தியும் ஓட்டுகிறார்கள். முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிடுவது எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது.
மொத்தத்தில் வண்டியை சீரான வேகத்தில், சரியான கியரில், குறைவாக பிரேக் போட்டு, போக்குவரத்தத் திட்டமிட்டு பயணிப்பது மைலேஜை அதிகரிக்க உதவும்.