மேலும் அறிய

Hindi imposition: இந்தித் திணிப்பை கைவிடுக; இருமொழிக் கொள்கை, தமிழ் மொழி பாதுகாப்பு- ராமதாஸ்

மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த  மறுப்பதைக் காரணமாக கொண்டு தமிழகத்தின் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது- ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கையில் இந்தித் திணிப்பை கைவிட்டு, இருமொழிக் கொள்கையை உறுதிப்படுத்தி தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த  மறுப்பதைக் காரணமாக கொண்டு தமிழகத்தின் பள்ளி கல்வி துறைக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் மொழி மற்றும் கல்வி அமைப்பில் ஒரே மாதிரியான கட்டுப்பாட்டை திணிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மூன்றுமொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதாகும்.

எந்த வடிவிலும் மொழி திணிப்பை ஏற்க முடியாது

தமிழகம் என்பது மொழி, பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை உயிராகக் காக்கும் மண். தமிழ் மொழிக்காக எண்ணற்ற போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த வரலாறு கொண்ட மாநிலத்தில் எந்த வடிவிலும் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை தான் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், தாய்மொழி பாதுகாப்பிற்கும், உலகளாவிய போட்டித் திறனுக்கும் ஏற்ற சிறந்த கல்வி முறை ஆகும். தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளே தமிழக மாணவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றன.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது

புதிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வியை மத்திய மயமாக்கும் முயற்சிகளும் கவலை அளிக்கின்றன. கல்வி என்பது மாநிலங்களின் உரிமை. மாநிலங்களின் மொழி, பண்பு, சமூக சூழல் ஆகியவற்றை புறக்கணித்து ஒரே மாதிரியான கல்விக் கொள்கையைத் திணிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.

மேலும், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை காரணம் காட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி தொடர்பான நிதிகளை வழங்காமல் மத்திய அரசு செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மாணவர்களின் நலன், பள்ளிக் கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிதியை அரசியல் நோக்கத்துடன் தடுத்து நிறுத்துவது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையே பாதிக்கும் செயலாகும். மாநில உரிமைகளை மதிக்காமல், மொழிக் கொள்கையை அழுத்தமாக பயன்படுத்தி நிதியை மறுப்பது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.

தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழி மட்டுமல்ல; அறிவியல், இலக்கியம், மருத்துவம், தத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பெருமை மிக்க அறிவுக் களஞ்சியம் ஆகும். அத்தகைய தமிழ் மொழியின் உரிமை மற்றும் வளர்ச்சியைப் பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள்

எனவே, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் பெயரில் இந்தித் திணிப்பு முயற்சிகளை உடனடியாக கைவிட்டு, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து கல்வி மற்றும் வளர்ச்சி நிதிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ் மொழியின் உரிமை, தமிழர் பண்பாடு மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க தமிழக மக்கள் என்றும் உறுதியாக குரல் கொடுப்பார்கள்’’.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget