மேலும் அறிய

நெல்லை | நீட் தேர்வில் சாதித்த 7 அரசுப்பள்ளி மாணவிகள்.. விழா எடுத்துக்கொண்டாடிய பள்ளி நிர்வாகம்..

பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும், கற்ற கல்வியினால் அதனை உடைத்து முன்நோக்கி கொண்டு செல்ல முடியும் என சாதித்து காட்டி உள்ளனர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 7 அரசு பள்ளி மாணவிகள்..

வெற்றி என்பது நாம்  இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்வதால் நம்மை தேடி வருவது அல்ல, அதற்கான முழு முயற்சியோடு நாம் அதனை தேடி சென்று  சாதிப்பது ஆகும், அப்படி சாதித்து காட்டி உள்ளனர் நெல்லையை சேர்ந்த 7 அரசு பள்ளி மாணவிகள். அப்படி அவர்கள் சாதித்ததுதான் என்ன என்று கேட்கிறீர்களா? அவர்கள் கடின உழைப்பால் பல ஆண்டு கண்ட கனவான மருத்துவ கனவு நிறைவேறியதுதான். 

நெல்லை மாவட்டம் டவுண் அருகே உள்ளது கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர், குறிப்பாக நெல்லை மாநகரில் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் இருந்து வந்தும் ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி மாணவிகளுக்கு தனியாக நீட் தேர்விற்கான வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ கனவோடு நீட் தேர்விற்கு மாணவிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் இந்தாண்டு நீட் தேர்வில் இந்த பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கி உள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். 


நெல்லை | நீட் தேர்வில் சாதித்த 7 அரசுப்பள்ளி மாணவிகள்.. விழா எடுத்துக்கொண்டாடிய பள்ளி நிர்வாகம்..

குறிப்பாக ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரிக்கும், காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவையிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கும், அஃப்ரின் ஃபாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர்..

இவர்களுக்கு பலர் நேரடியாகும் சமூக வலைதளங்கள் மூலமாகமும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் பள்ளி நிர்வாகமும் இவர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றை எடுத்தது, அதில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி கவுரப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள், இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினர்.  மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட மற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கியுள்ளது.

குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அறிவித்து உள்ளதை அனைவரும் பயன்படுத்தி சாதித்து காட்ட வேண்டும், கடின உழைப்பால் சாதித்த 7  பேரையும் முன்னுதாரணமாக கொண்டு வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும, பள்ளிக்கும் பெருமையை தேடி தர வேண்டும் என  ஊக்கப்படுத்தினர். 


நெல்லை | நீட் தேர்வில் சாதித்த 7 அரசுப்பள்ளி மாணவிகள்.. விழா எடுத்துக்கொண்டாடிய பள்ளி நிர்வாகம்..

அதே போல வெற்றி பெற்ற மாணவிகள் கூறும்பொழுது, ”பலர் அரசுப்பள்ளியில் படித்துவிட்டு மருத்துவராக முடியாது என்ற நெகட்டிவான வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தனர். ஆனால் எங்களின் கடின உழைப்பும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் எங்களை வெற்றி பெற செய்து உள்ளது. அதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பயிலும் நீட் பயிற்சிக்கான வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதன் மூலம் படிப்பதற்கான முயற்சியையும் ஆட்சியர் விஷ்ணு ஏற்படுத்தி கொடுத்தார். மற்ற மாவட்டங்களில் இல்லாத ஒரு ஏற்பாட்டை ஆட்சியர் எங்களுக்காக உருவாக்கி கொடுத்தார்.


நெல்லை | நீட் தேர்வில் சாதித்த 7 அரசுப்பள்ளி மாணவிகள்.. விழா எடுத்துக்கொண்டாடிய பள்ளி நிர்வாகம்..

இப்படி நெகட்டிவான வார்த்தைகளை உதிர்க்கும் ஒரு சிலருக்கு மத்தியில் பலரின் ஆதரவு எங்களின் தன்னம்பிக்கையை மேலும் எங்களை ஊக்கப்படுத்தி முன்னேற செய்தது, இதே போல எங்களை தொடர்ந்து வரும் மாணவிகளும், வறுமை, நெகட்டிவான எண்ணங்களை உதறி தள்ளிவிட்டு முன்னேறி செல்வதற்கான பாதையை மட்டுமே தேடினால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் சாத்தியமே” என்கின்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக வெற்றி பெற்ற மாணவிகள் தங்களின் அனுபவங்களையும், எவ்வாறு படித்தால் சாதிக்கலாம், எப்படி தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் மற்ற மாணவிகளுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஊக்கப்படுத்தினர். கடின உழைப்பும், விடாமுயற்சியுமே நம் வாழ்வின் அடுத்த கட்ட இலக்கை நோக்கி நகர்த்தும் என்பதற்கு இந்த அரசு பள்ளி மாணவர்களே உதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை..

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget