மேலும் அறிய

தலைமை ஆசிரியர்கள் இல்லாத 4500 அரசுப்பள்ளிகள்; கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக வேதனை

தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

4500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் இதுதான் திமுக அரசின் சாதனையா எனவும் பா..நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனால் பணி உயர்வுக்கு சாத்தியமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இதனால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''தமிழ்நாட்டில் 2994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

பாடங்களை நடத்த முடியவில்லை

தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாகப் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பள்ளி மணி நேரத்தின் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணிக்கான கடமைகளை நிறைவேற்றுவதிலேயே கழிப்பதால் அவர்களால் பாடங்களை நடத்த முடியவில்லை. அதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

என்ன காரணம்?

தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம்தான் காரணம் ஆகும்.  கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அப்போதுதான் காலியாக உள்ள பிற ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை நிரப்ப முடியும்.  ஆனால், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசு பள்ளிகளில் ஏற்கனவே கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்களையும் நிர்வாகப் பணிக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித் தரத்தை மேலும் சீரழித்து வருகிறது.  இந்த நிலையை மாற்றி, காலியாக உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?

Embed widget