Assistant Professor: வெளியான சூப்பர் அறிவிப்பு: 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறலாம் (உத்தேசத் தேதி) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
காலி இடங்கள் விவரம்
ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் - 72
பற்றாக்குறை காலியிடங்கள் - 4
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் இடங்கள் – 3
தற்போதைய காலி இடங்கள் – 3921
மொத்த இடங்கள் – 4000
வயது வரம்பு
01.07.2024 அன்று 57 வயது நிறைவடையாத தேர்வர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி
* குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுநிலைப் பட்டம் அவசியம். எனினும் எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி / டிஎன்சி / பிசி தேர்வர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.
* நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வில் அல்லது ஸ்லெட் எனப்படும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம்.
* அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், "How to Apply" என்று கொடுக்கப்பட்டுள்ள பகுதியை கவனமாகப் படித்து அறிந்துகொள்ளவும்.
சரியான மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை அளித்து முன்பதிவு செய்யவும்.
பெயர், விண்ணப்பிக்கும் பதவி, பாடம், பிறந்த தேதி, சமூகம், முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாக உள்ளிடவும்.
தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு
தாள் 1 – 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
பிரிவு 1- எம்சிக்யூ எனப்படும் பல்வேறு தெரிவுகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை. இதில் 50 கேள்விகள் கேட்கப்படும். தமிழ் மொழிக்கு தலா 25 கேள்விகளும் பொது அறிவுப் பகுதியில் 25 கேள்விகளும் கேட்கப்படும்.
பிரிவு 2 - விவரித்து எழுதும் முறை. இதில் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
தாள் 2- இதிலும் 3 மணி நேரத்துக்கு 100 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும்.
- நேர்காணல்
நேர்காணல் 30 மதிப்பெண்களுக்கு வைக்கப்படும். உள்ளடக்க அறிவு, மொழி ஆளுமை, பேசும் விதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்கப்படும்.
முழுமையான விவரங்களைப் பெற https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.