மேலும் அறிய

TRB Exam: ஆசிரியர் பணிக்கு 2 தேர்வுகளா? அரசாணை 149-ஐ ரத்து செய்வது எப்போது?- அன்புமணி ராமதாஸ் கேள்வி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு பணிக்கு இரு தேர்வுகளை நடத்துவது சமூக அநீதி என்பதால், ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முழுநேரத் தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடப்பது குறித்தும், அதனால் ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் காலியாகவே நீடிப்பதையும் சுட்டிக்காட்டி கடந்த 26-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், 6,553 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கு 2 தேர்வுகள்?

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்துவது சமூக அநீதி என்பதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உள்ளன. ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  அதற்கான தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதியை உறுதி செய்வதற்காகத் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அத்தகைய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்? அது எந்த வகையில் சமூக நீதி ஆகும்?

இதில் குறிப்பிடப்பட்ட வேண்டிய இன்னொரு முரண்பாடு என்னவென்றால், தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தகுதித் தேர்வை நடத்துவதும் ஆசிரியர் தேர்வு வாரியம்தான்; போட்டித் தேர்வை நடத்துவதும் ஆசிரியர் தேர்வு வாரியம்தான். இரு தேர்வுகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஒரு பணிக்கு ஒரே மாதிரியான இரு தேர்வுகளை, ஒரே பிரிவினருக்கு, ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒரே அமைப்பு நடத்துவதை விட முரண்பாடான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் இருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தொடக்கத்தில் எதிர்ப்பு எழுந்தாலும் பின்னர் தகுதித்தேர்வு நடைமுறைக்கு வந்தது. 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது; அப்போது போட்டித் தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை.

ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம்  போட்டித் தேர்வை திணித்தது. அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார்; ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை; அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முந்தைய அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணை. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

ஆனாலும், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த வரை இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதற்கான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. 2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்று சூளுரைத்திருந்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனால், அரசாணை எண் 149 ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், முந்தைய அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை கொஞ்சமும் மாற்றாமல் செயல்படுத்த திமுக அரசு தயாராகியுள்ளது.

பல லட்சம் செலவழிக்க வேண்டும்

தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. அதனால், அவர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித் தேர்வு எழுதிதான் பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியைப் பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் பணம் படைத்த, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைப்பதற்கு போட்டித் தேர்வு வகை செய்கிறது. அதனால்தான் இதை சமூக அநீதி என பாமக விமர்சிக்கிறது.

எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு  அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget