12th Result 2024: புதுச்சேரி, காரைக்கால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன? - முழு விவரம் இதோ
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 92.41% ஆகும்
![12th Result 2024: புதுச்சேரி, காரைக்கால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன? - முழு விவரம் இதோ 12th Result 2024 Puducherry Karaikal All Schools Pass Percentage 92.41 Plus Two Result TNN 12th Result 2024: புதுச்சேரி, காரைக்கால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்; அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன? - முழு விவரம் இதோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/8cf8e09db195987d62d7d2722a17c6961714974303878113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 92.41% ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 85.35 % ஆகும்.
கடந்த மார்ச் 2024 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று (06.05.2024) வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12948 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
புதுச்சேரி & காரைக்கால் பகுதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
புதுச்சேரி - காரைக்கால் : 92.41%
புதுச்சேரி பகுதி : 93.38%, காரைக்கால் பகுதி : 87.03%
புதுச்சேரி - காரைக்கால் பகுதி அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
புதுச்சேரி - காரைக்கால் : 85.35 %
புதுச்சேரி பகுதி : 86.39%, காரைக்கால் பகுதி : 81.65%
கூடுதல் விவரங்கள் :
புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை : 155
2023-24 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் : 92.41%
புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 55
புதுச்சேரி பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை : 51
காரைக்கால் பகுதியில் 100% பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை :4
புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை : 55
புதுச்சேரி & காரைக்கால் பகுதியில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை : 1
புதுச்சேரி பகுதியில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை :௦
காரைக்கால் பகுதியில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை :0
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)