மேலும் அறிய
விவாகரத்து பெறாமல் கணவன் திடீர் திருமணம்.. குழந்தையுடன் தர்ணாவில் அமர்ந்த இளம்பெண்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேறொரு திருமணம் செய்துகொண்ட கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை பகுதியைச் சார்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் கீதா. இவருக்கும் மதுராந்தகம் ஒத்தவாடை வன்னியர் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8-வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கணவர் முத்துக்குமார், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து மனைவி அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததால் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார். மேலும் புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவரை மீண்டும் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கீதா இரண்டாவது முறையாக அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்திற்கு சென்று கேட்டபோதும் முறையாக பதில் அளிக்காததை கண்டித்து கீதா தனது 4 வயது பெண் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவை அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கீதா கூறுகையில், இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டும் திடீரென்று என் கணவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்கள் உடனடியாக எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண் ஒருவர் கணவனை மீட்டுத் தரக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
‛அவரை என்னனு நெனச்சீங்க...’ வார்னருக்காக வரிந்து கட்டி களமிறங்கிய மனைவி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
ட்ரெண்டிங் செய்திகள்
வினய் லால்Columnist
Opinion