மேலும் அறிய

Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!

விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பிரேர்னா நினைத்தபோது கிரண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பிரேர்னாவை சந்திப்பதை தவிர்த்தும் வந்துள்ளார்.

பெங்களூருவில் தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்த காதலனை, இளம்பெண் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள  அஞ்சனபுராவில் பிரேர்னா என்ற இளம்பெண் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கம்யூனிகேஷன் சென்டரில் பணியாற்றி வருகிறார். இதேநிறுவனத்தில் கிரண் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதல் முளைத்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

விரைவில் திருமணம் செய்துக் கொள்ளலாம் என பிரேர்னா நினைத்தபோது கிரண் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பிரேர்னாவை சந்திப்பதை தவிர்த்தும், அவரது அழைப்புகளை எடுக்காமலும் இருந்துள்ளார். இதுதொடர்பாக கிரணிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பிரேர்னா ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தார். 

தன்னை காதலித்து நம்பிக்கை கொடுத்து விட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று தெரிந்ததும், புறக்கணிக்கும் கிரணுக்கு தக்க பாடம் புகட்ட பிரேர்னா எண்ணினார். அதன்படி அஞ்சனபுராவில் உள்ள தனது வீட்டிற்கு கிரணை அழைத்துள்ளார். அம்மா மற்றும் சகோதரன் வெளியில் சென்றிருப்பதாகவும் நாம் தனிமையில் நேரம் செலவிடலாம் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி கிரணும் வீட்டுக்கு செல்ல இருவரும் சிறிது நேரம் பேசியுள்ளனர். அப்போது தன்னிடம் லவ் ப்ரோபோஸ் செய்ய ஒரு புதுத்திட்டம் இருப்பதாக பிரேர்னா கூறியுள்ளார். 

என்னவென கிரண் கேட்க, அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து முதலில் கண்களை கட்டியுள்ளார். பின்னர் கயிறு கொண்டு நாற்காலியில் அவரை கட்டிப் போட்டுள்ளார். இதனை அனைத்தையும் பிரேர்னா வீடியோவாக பதிவு செய்ய தொடங்கியுள்ளார். கிரண் கட்டிப்போட்டு என்ன செய்யப் போகிறாய் என கேட்டதற்கு வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் ஸ்டைலில் காதலை தெரிவிக்கப் போவதாக பிரேர்னா கூறியுள்ளார். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன்னிடம் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை கிரண் மீது ஊற்றியுள்ளார். அவர் சுதாரிப்பதற்குள் பிரேர்னா தனது காதலனை தீ வைத்துக் கொளுத்தினார். கிரண் உயிருடன் எரிந்த காட்சிகளையும் செல்போனில் வீடியோவாக எடுத்துப் பார்த்துள்ளார்.   

பயதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரேர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரண் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை பிரேர்மா ஒப்புக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget