மேலும் அறிய

Chennai: சென்னையில் அதிர்ச்சி.. உள்ளாடையுடன் தூக்கில் தொங்கிய பெண் காவலர்.. நடந்தது என்ன?

திருமண நாள் முதல் சந்தேகம், அடிக்கடி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்த சிலம்பரசன் தற்போது கொலை வரை சென்று விட்டதாக உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையில் பெண் காவலர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது கணவர் கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் சிலம்பரசன் என்பவர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில் 29 வயதான புவனேஸ்வரி ஆவடி பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அயல் பணியாக எழும்பூர் குற்றப்பிரிவில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இதனிடையே சிலம்பரசனை காதலித்து கடந்த 2024ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தம்பதியினர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். 

இதற்கிடையில் காதல் திருமணம் செய்ததால் தங்கள் இல்லற வாழ்க்கை கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்த புவனேஸ்வரிக்கு எல்லாம் தலைகீழாக அமைந்தது. திருமணமான நாளில் இருந்து சிலம்பரசன் மனைவி மீது சந்தேகப்பட ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் தினமும் மது அருந்து விட்டு வந்து புவனேஸ்வரியை தகாத வார்த்தைகள் பேசி அடித்து சித்ரவதை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இப்படியான நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மது அருந்தி விட்டு வந்த சிலம்பரசன் புவனேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில் புவனேஸ்வரி உயிரிழந்து விட்டதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

ஆனால் இது ஒரு கொலை என புவனேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது சம்பவம் நடந்த நாளில் இரவு வீட்டுக்கு வந்த சிலம்பரசன், தனது சொந்த ஊரில் இடம் வாங்க வேண்டியிருப்பதால் தனக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. அதனை உன் பெற்றோரிடம் வாங்கி கொடு என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் புவனேஸ்வரியை அடித்து கொலை செய்து விட்டு தூக்கி தொங்க விட்டுள்ளான். தற்கொலை செய்துக் கொள்பவர்கள் யாராவது அரை நிர்வாண கோலத்தில் உயிரை மாய்த்துக் கொள்வார்களா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

திருமண நாள் முதல் சந்தேகம், அடிக்கடி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்த சிலம்பரசன் தற்போது கொலை வரை சென்று விட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புவனேஸ்வரி தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Embed widget