மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
கந்துவட்டி கொடுமையால் பணத்தை கட்டவில்லை என்றால் பெண் பிள்ளையை கடத்தி விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக பெண் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர், அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த பார்கவி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், பத்மாவதி சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த பார்கவி 2 பைசா வட்டியை 6 பைசாவாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பத்மாவதியும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பத்மாவதி வட்டி கொடுக்க முடியாமல் பரிதவிக்க, பார்கவி தன்னிடம் சீட்டு கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். சீட்டில் விழும் முழு தொகை மூலம் தனது வட்டியை அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பத்மாவதி சீட்டு கட்ட தொடங்கி அதில் வரும் தொகையை வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணத்தை பத்மாவதியிடம் வாங்க தொடங்கினர் பார்கவி. இப்படியாக 6 லட்ச ரூபாய்க்கு 14 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் கட்டியுள்ளார். இந்நிலையில், வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் தனது 11 வயது மகளை, கடத்திச் சென்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் என காவல் துறையிடம் பத்மாவதி புகார் அளித்துள்ளார். அதேபோல் மேலும் பணத்தை கட்டச் சொல்லி சம்பந்தப்பட்ட கந்துவட்டி நபர்கள் ஆபாசமான வார்த்தைகளை தங்களை மிரட்டுவதாகவும் புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தான் பலமுறை அவரிடம் நான் முறையாக பணம் கட்டிவிட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் அவர் தொடர்ந்து, மிரட்டுவதும் இன்னும் பணம் கட்ட வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடன் மட்டும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion