கணவன் கண்முன்னே நடந்த சோகம்: திருமணமாகி இரண்டு மாதத்தில் விபத்தில் உயிரிழந்த மனைவி.. கதறி அழுத கணவர்
திருமணமான இரண்டே மாதத்தில், கணவரின் கண் முன்பே, புது மனைவி உயிரிழந்தது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செம்மங்குடி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கீதபிரியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின், இவர்கள் சென்னையில் தங்கியிருந்துள்ளனர். மேலும், மணிகண்டன் மற்றும் கீதப்பிரியா ஆகியோர், பல்லவன் கிராம வங்கியிலும் அலுவலராக பணிபுரிந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறை என்பதால், காஞ்சிபுரம் கிளம்பிச் செல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் இருந்து கிளம்பியவர்கள், ரங்கசாமி குளம் அருகே வண்டியை நிறுத்தியுள்ளனர். அங்கிருந்த மருந்து கடையில் மருந்து வாங்கிக் கொண்டு நடைபாதையில் நடந்து வந்துள்ளனர். அப்போது, அவ்வழியே வந்த கார் ஒன்று தாறுமாறாக தறிகெட்டு ஓடியுள்ளது. அப்படி ஓடிய கார், ஆட்டோ ஒன்றில் மீது மோதியது. தொடர்ந்து, அந்த கார் நடைபாதையில் பாய்ந்தது. இதில், கீதப்ரியா மீது பலமாக மோதி, அருகில் இருந்த கடையின் நடைபாதையை உடைத்துக் கொண்டு நின்றது. அனைவரும் பதறிப் போனார்கள்
அங்கிருந்த பொதுமக்கள், கணவர் மணிகண்டன் மற்றும் கடை ஊழியர்கள் என யாரும் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனைவியின் நிலையைக் கண்டு பதறிப் போன மணிகண்டன், காருக்கு அடியில் சிக்கி இருந்த மனைவியை பொது மக்கள் உதவியுடன் மீட்டார். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அது பனலளிக்காமல் கீதப்ரியா உயிரிழந்தார்.
திருமணமான இரண்டே மாதத்தில், தனது கண்முன்னே விபத்துக்குள் ஆகி, மனைவி உயிரிழந்ததால் மணிகண்டன் அழுதுகொண்டே இருந்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது. இந்த விபத்து தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் போலீசார், விபத்துக்கு காரணமாக இருந்த காரை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவும் செய்துள்ளனர். மேலும், இந்த காரை ஓட்டி வந்த காஞ்சிபுரம் குமார் தெருவைச் சேர்ந்த மதன் என்பவர், காவல்துறையிடம் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News)