மேலும் அறிய

Crime: இடையூறாக இருந்த கணவன் - கள்ளக்காதலன்களை ஏவி விட்டு கொன்ற மனைவி..!

கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததால், அவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில் கள்ளக்காதலனிடம் கணவரை கொலை செய்து விடுமாறு கூறி இருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் பிச்சைக்கனி. இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிச்சைக்கனி பரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பிவந்துள்ளார். மே மாதம் 27-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் பிச்சைக்கனி மனைவி சாந்தி தேவிபட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். இதுகுறித்து தேவிபட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சாந்தி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவருடைய மொபைல் போனை வாங்கி சோதனை செய்தபோது, அவரது சொந்தக்காரர்களான பார்த்திபன் மற்றும் கலைமோகன் என்ற இருவரிடம் சாந்தி அதிகமாக பேசியிருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தேவிபட்டினம் அருகில் உள்ள சீனங்குடி கிராமத்தில் இருக்கும் கலை மோகன்(26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.


Crime: இடையூறாக இருந்த கணவன் - கள்ளக்காதலன்களை ஏவி விட்டு கொன்ற மனைவி..!

இதில் பிச்சைக்கனி மனைவி சாந்திக்கு, அவரது உறவினர்களான பார்த்திபன் மற்றும் கலை மோகன் ஆகிய இருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததால் அவர் இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில் சாந்தி கலைமோகனிடம் அவரது கணவரை கொலை செய்து விடுமாறு கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து கலைமோகன் மற்றும் பார்த்திபன் இருவரும் பிச்சைக்கனியை குடிக்க வைத்துள்ளனர். போதையில் இருந்த பிச்சைக்கனியை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி அரசலூர் அருகில் இருக்கும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி மட்டதியில் உடலை வீசியுள்ளனர். இந்த கொலை தொடர்பாக கலை மோகனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சாந்தி தலைமறைவாகி விட்டார், பார்த்திபன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார்.


Crime: இடையூறாக இருந்த கணவன் - கள்ளக்காதலன்களை ஏவி விட்டு கொன்ற மனைவி..!

இந்நிலையில், சாந்தி ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை பகுதியில் இருந்து மதுரை சென்று அங்கிருந்து விமானத்தில் அந்தமான் தப்ப முயல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மதுரை விமான நிலையத்தில் வைத்து சாந்தியை கைது செய்தனர். ராமநாதபுரம் அழைத்து வரப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மலேசியா தப்பி சென்ற பார்த்திபனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விமான நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget