(Source: ECI/ABP News/ABP Majha)
திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
விழுப்புரம்: திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது, ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலை, மன்னார் சாமி கோயில் அருகே பிரம்மதேச காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த டீக்கடை ஒன்றில் சந்தேகப்படும்படியான நபர் நீண்ட நேரமாக நின்று இருந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.
Actor Ajith : அஜித் அட்டகாசம்..! 4 தங்கம் - 2 வெண்கலம் வலிமை காட்டிய 'தல
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை பிரம்மதேசம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை அசோக் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்கின்ற கலச வெங்கடேசன்(36), என்பதும் இவர் திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பல ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
தற்கொலைக்கு முயற்சித்த விழுப்புரம் மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னையில் அனுமதி
மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மரக்காணம் சாலை அண்ணா நகர், மயிலம், கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். மேலும் பிரம்மதேசம், மயிலம், திண்டிவனம், ரோசணை ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் வெங்கடேசன் சம்பந்தப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி: மாற்றுத்திறனாளி மாணவிக்காக ‘பேவர் பிளாக்’ சாலை அமைத்து கொடுத்த கலெக்டர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்